*பஞ்சகற்பம் குளியல் பொடி :
நெல்லி வற்றல் - 1 1/2பங்கு(நிலம்)300g
வெண் மிளகு - 1 1/4பங்கு(நீர்)250g
கடுக்காய் - 1பங்கு(நெருப்பு )200g
கஸ்தூரி மஞ்சள் - 3/4 பங்கு(காற்று)150g
வேப்பம் வித்து - 1/2 பங்கு(ஆகாயம்)100g
*இவை ஐந்தையும் சுத்தி செய்து பொடித்தால் பஞ்சகற்பம் பொடி தயார்,தேவையான அளவு பொடி (2 -3 ஸ்பூன்) எடுத்து கால் டம்ளர் காய்ச்சாத நாட்டு பசும்பால் விட்டுக் கலந்து சிறு தீயில் வைத்து காய்ச்சவும், முடிந்த மட்டும் பால் திரியாமல் பார்த்து இறக்கவும்.கை பொறுக்கும் சூட்டில்,கண்ணை தவிர்த்து, உச்சஞ் தலையில் இருந்து உள்ளங்கால் வரை தேய்த்து, அரை மணி நேரத்துக்கு பின் சுடுநீரில் சீகக்காய் தூள் மட்டும் உபயோகப்படுத்தி குளிக்கவும்.
*இப்பொடியை உடலில் தேய்த்தப் பிறகு சில இடங்களில் எரிச்சல் இருக்கும் அவ்விடத்தில் இரத்த ஓட்டம் சரியில்லை என்று அர்த்தம், அதிகப்படியான உஷ்ணம் வெளியாகுவதை உணர்வீர்கள்.
*இரத்த ஓட்டம் சீராகும்,தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், தலைமுடியில் அரிப்பு, பொடுகு, முடி உதிர்வு ப்ரச்சனை, அதிக உடல் சூடு, மூட்டு வலி, மூலம், கபால சூடு,கண் எரிச்சல் ஆகியவை நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும் நோய்வராமல் தடுப்பாற்றலை கொடுக்கும் அனைத்து பிரச்சனைகளும் குணமாகும். இக்குளியல் எடுக்கும் நாளன்று அசைவும், குளிர்ச்சியான உணவையும், பகலில் தூங்க கூடாது, தூர பயணம், இல்லற வாழ்வை தவிர்க்கவும்.உடல் லேசாகும், காற்றில் பரப்பது போலங்க. கட்டாயமாக இரவு 8 மணிக்குள் தூங்க செல்லவும்.
* உடலில்லுள்ள பஞ்சபூதங்களை சரியாக வைத்திருக்கும்.இப்பொடியை அம்மாவாசை மற்றும் பெளர்ணமியில் இருத்து சரியாக ஏழாவது நாள் உபயோகிக்கவும், இப்படி மாதத்தில் 2 குளியல் மட்டுமே போதுங்க. இதுவே ராஜ குளியல்.
*பொடியை தேய்ப்பதற்கு முன்,
*நல்லெண்ணை - ஒரு குழிக்கரண்டி
சீரகம் - 1 சிறு கரண்டி
புழுங்கலரிசி - 1/4 சிறு கரண்டி
பூண்டு - 2 பல் சேர்த்து காய்ச்சி தலைக்குக், உடம்புக்கும் தேய்க்கவும்.
* *மரசீப்பைக் கொண்டு தலைவாரவும் முடியின் வேர் கால்களில் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும், முடி உதிர்வதும் கட்டுபடும்.
. உடல் சுத்தி
****************
தினந்தோறும் குளியல்
*******************************
குளியல் என்பது உடல் அக உறுப்புகளுக்கும் புற உறுப்புகளுக்கும் புத்துணர்ச்சி அளிக்கவும் உடலின் வெப்ப நிலையை சமப்படுத்தவும் உடலில் அன்றாடம் படியும் மாசுக்களை நீக்கவும் வியர்வை சுரப்பிகளை சுத்தம் செய்யவும் பயன்படும் முறையாகும் .
குளிக்கும் முறை: அவரவர் இருப்பிடத்திற்கு ஏற்றார் போல் உடல்நிலைக்கு தகுந்த போல் குளிர்ந்த நீரிலோ மிதமான வெந்நீரிலோ ஏதாவது மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட சூரணம் அல்லது சோப்புகளை கொண்டு தேய்த்து குளித்து விட்டு பின் உடம்பின் எல்லா இடங்களிலும் தொட்டு தடவி தேய்த்து குளிக்க வேண்டும் ஏனென்றால் நம் உடலில் உள்ள உள் உறுப்புகளை புத்துணர்வு அடைய செய்யும் வெளி உறுப்புகள் உள்ளன. மயக்க நிலையில் உள்ளவர்களுக்கு தண்ணீர் தெளித்தால் எவ்வளவு பிராணசக்தியை கிடைக்கின்றதோ அதேபோல் குளிப்பதன் மூலம் அனைத்து உறுப்புகளுக்கும் பிராண சக்தி கிடைக்கிறது குளித்தவுடன் கவனித்து பாருங்கள் கண் நன்றாக தெரியும் காது நன்றாக கேட்கும் நன்கு பசி எடுக்கும் உடல் மென்மையாக இருக்கும் புத்துணர்ச்சியாக இருக்கும் இதனையே முறையாக செய்தால் பல நோய்களில் இருந்து விலகி நிற்கலாம் உடலில் அசதியாக இருந்தாலோ களைப்பாக இருந்தாலோ உடல் முழுவதும் வலி காணப்பட்டாலும் சோம்பலாக இருந்தாலோ குளித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறோம் இது உண்மையும் ஆகும் குளியல் ஒரு மருத்துவமாகும் ஆரோக்கியமாக வாழ தினம் இரு வேளை அல்லது ஒரு வேளை மூலிகைகளுடன் குளிக்க வேண்டும் நல்ல தரமான மூலிகை குளியல் பொடிகளை பயன்படுத்தி குளிக்கும் போது உடலில் தோலில் உள்ள கழிவுகள் அகற்றப்படுகிறது வியர்வை நாளங்கள் புத்துணர்ச்சி பெறுகிறது நோய் நீக்கப்படுகிறது ரசாயனங்கள் கலந்த சோப்புகளை பயன்படுத்தும்போது வியர்வை சுரப்பிகள் அடைக்கப்பட்டு கழிவுகள் தேங்கி தோல் நோயாகவும் ரத்தத்தில் கலந்து பல்வேறு நோய்களை உண்டாக்குகிறது வாத பித்த கப உடலினர்களுக்கு ஏற்றது போல் மூலிகை குளியல் பொடிகளை கொண்டு குளிக்க வேண்டும் ..
பஞ்ச கல்ப ஸ்நானம்
பல்வேறு வேலை பழுக்களினாலும் தாம்பத்திய உறவினாலும் மன உளைச்சலினாலும் உடலில் வெப்பம் அதிகரிக்கும் மற்றும் யோக சாதனை செய்பவர்களுக்கு உடலில் உஷ்ணம் ஏற்படும் இதனை போக்க சித்தர்களின் அற்புத முறை பஞ்ச கல்ப ஸ்நானம் ஆகும்.