நீலகண்ட மணி மாத்திரை
"திரு ஆருட்பா-வில் கூறியுள்ள மருத்துவ குறிப்பு":-
மாந்தாளிக்கள்ளி, சதுரக்கள்ளி, வெள்ளெருக்கு வேர்ப்பட்டை, இவைகளைச் சமன் எடையால் நிழலில் உலர்த்திக் கொண்டு ஐந்து பலம் குழித்தைலம் வாங்கிக் கொண்டு, சுரைக் குடுக்கையில் வைத்துக் கொண்டு, பெருங்காயம், லிங்கம், அபினி, இந்த மூன்றும் ஒவ்வொரு பலம் கல்வத்திற் போட்டுப் பொடித்துக் கொண்டு, குங்குமப்பூ, கஸ்தூரி, கோரோசனை, பச்சைக் கற்பூரம், கூகை நீறு இந்த ஐந்தும் வகைக்கு ஒன்றேகால் வராகனெடை சேர்த்து, தைலத்தை விட்டு எட்டு ஜாமம் அரைத்து, குன்றிமணிப் பிரமாணம் மாத்திரை செய்து மூங்கில் குழாயில் அடைத்து மண்குடத்தில் வைத்து, பூமிக்குள் நாற்பது நாள் வைத்துப் பின்பு எடுத்து, விஷ்ணுவுக்குப் பூசை செய்து, தங்க டப்பியில் வைத்துக் கொண்டு வாந்தி பேதி கண்டவர்களுக்கு மணிக்கு மூன்று மாத்திரை வீதம் தேனில் கொடுத்தால் வாந்தி பேதி நிற்கும்.
ஜன்னி வகைகளுக்கும் பிரயோகிக்கலாம், நல்லபாம்பு முதலிய விஷ திருஷ்டிகளுக்கும், தகுந்த அனுபானங்களில் பிரயோகிக்கலாம். இந்த மாத்திரைக்கு விஷ்ணு வைத்த பெயர் பிரளய கால ருத்திர மணி மாத்திரை. சிவனிட்ட பெயர் நீலகண்ட மணி மாத்திரை. இது நாடியில் சொல்லியது.
காலாணிக்கு களிம்பு:-
மருதாணி - ஒரு கைப்பிடி
மிளகு - 3 எண்ணிக்கை
வசம்பு - ஒரு துண்டு
படிகாரம் - 2 கிராம்
மஞ்சள் - ஒரு ஸ்பூன்
இவற்றை கடுகெண்ணெய் விட்டு அரைத்து காலாணியில் கட்டிவர ஏழு தினங்களில் காலாணி குணமாகும்.
துருசு - 5 கிராம்
மிளகு - 50 கிராம்
மஞ்சள் - 50 கிராம்
வெண்ணெய் - 200 கிராம்
ஒன்று முதல் மூன்றுவரை உள்ள சரக்குகளை தூள் செய்து வெண்ணெய்யுடன் கலந்து வைத்துக்கொள்வும். இதை தினமும் காலாணியில் போட்டுவர குணமாகும்.
மஞ்சள், மரமஞ்சள், கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சம அளவில் எடுத்து அரை ஸ்பூன் சங்குபற்பத்தை இத்துடன் கலந்து வெந்நீரில் குழைத்துப் போட காலாணி குணமாகும்
No comments:
Post a Comment