tamil maruthuvan

ஆல் – Ficus benghalensis – MORACEAE
ஆலம்பழுப்பு இலைகளை சுட்டுச் சாம்பலாக்கி நல்லெண்ணெய்யில் கலந்து கரப்பானுக்குப் பூச குணமாகும்.
ஆலம்பட்டையை இடித்து 10 மடங்கு நீர்விட்டு குடிநீராக்கி வாய் கொப்புளித்து வர வாய்ப்புண், ஈற்றுப்புண் இவை போகும்.

12.ஆவாரை – Cassia auriculata – CAESALPINIACEAE
பூவின் சூரணத்தையோ அல்லது பூவைக் குடிநீராக்கி பாலில் கலந்து தினமும் குடிக்க மேகவெட்டை, உடல்சூடு இவைநீங்கும்.
ஆவாரை இலை பூ, காய், பட்டை, வேர் என இவ்வைந்தின் குடிநீரைக் குடிக்கச் செய்ய நீரிழிவு தீரும்.

13.ஆனை நெருஞ்சில் – Pedalium murex – PEDALIACEAE
இலயை அரைத்துப் பற்றிட காயங்கள் ஆறும்.
இதன் இலையை நீரில் கலக்க நீர் வழுவழுப்பாக மாறும். இதனை சிறிது சர்க்கரை சேர்த்து நாள்தோறும் காலையில் பருகி வர வெள்ளை, நீர்க்கடுப்பு, சொட்டு மூத்திரம் இவை தீரும்.

14.இலந்தை – Ziziphus mauritiana – RAMNACEAE
இலை – 1பிடி, மிளகு – 6, பூண்டு – 4 எடுத்து அரத்து மாதவிலக்கான முதல் 2 நாட்கள் கொடுத்து வர கருப்பைக் குற்றங்கள் நீங்கி பெண் மலடு நீங்கும்.
பச்சை இலையை அரைத்து சிறுஎலுமிச்சாங்காயளவு புளித்த மோரில் கொடுக்க எருவாய்க் கடுப்பு குணமாகும்.

15.இலவு – Ceiba pentandra – BOMBACACEAE
இலையை அரைத்து பசும்பா

லில் கலக்கி கொடுக்க சிறுநீர் எரிச்சல் நீங்கும்.
பூவை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி 100 மி.லி. காலை மாலை குடிக்கச் செய்ய மலச்சிக்கல், நீர்க்கட்டு நீங்கும்.

No comments:

Post a Comment

drbala avalurpet