tamil maruthuvan

இலுப்பை – Madhuca longifolia – SAPOTACEAE
இலுப்பை இலையை மார்பகத்தில் வைத்துக் கட்டி வர பால் சுரப்பு மிகும்.
இலுப்பை எண்ணெயை வெதுவெதுப்பாக சூடு செய்து தடவி செந்நீர் ஒற்றடம் கொடுக்க இடுப்பு வலி தீரும்.
10 கிராம் பூவை 200 மி.லி. பாலில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி குடித்து வர தாது பெருகும்.

17.இம்பூறல் – Oldenlandia umbellate – RUBIACEAE
இலைச்சாற்றைத் தடவி வர சுர வேகத்தில் காணும் உள்ளங்கால், உள்ளங்கை எரிச்சல் தீரும்.
வேரை நிழலில் உலர்த்திப் பொடி செய்து, அதனுடன் சிறிதளவு அரிசி மாவு கலந்து அடை செய்து காலை, மாலை சாப்பிட அனைத்து கப நோய்களும் தீரும்.

18.உசில் – Albizia amara – MMOSACEAE
உசிலம் இலையைப் பொடி செய்து எண்ணெய் முழுக்கின் போது தேய்த்துக் குளிக்க உடல் குளிர்ச்சி பெறும்.
இதன் வேர்ப்பட்டை, வெங்காயம், கரியாக்கிய வசம்பு வகைக்கு 10 கிராம் எடுத்து நீரிலிட்டு காய்ச்சி குடிநீராக்கி வேளைக்கு 1-2 தேக்கரண்டி 3 வேளை கொடுக்க குழந்தைகளின் அள்ளு மாந்தம் குணமாகும்.

19.ஒதியன் – Lannaea coromandelica – ANACARDIACEAE
ஒதியன் மரப்பட்டைக் குடிநீரால் புண், புரையோடிய புண்கள் இவற்றைக் கழுவலாம்.
ஒதிய மரத்தின் பிசினைப் பொடி செய்து 400 மி.கி. அளவு கொடுக்க இருமல் நோய் குணமாகும்.

20.உப்பிலாங்கொடி – Pentatropis capensis – ASCLEPIADACEAE
இலையை வதக்கிப் பிழிந்த சாறு – 10 மி.லியை 10 மி.லி தாய்ப்பாலுடன் காலை, மாலை கொடுத்து வர குழந்தைகளுக்குக் காணும் மாந்தம், இரத்தக் கழிச்சல் இவை நீங்கும்.
மாந்தத்தினால் வயிறு உப்பிகாணின் குழந்தைகளின் அரையில் இக்கொடியை கட்ட தீரும்.

31.கல்யாண முருங்கை – Erythrina indica – CAESALPINIACEAE
இலைச்சாறு 30 மி.லி. 10 நாட்கள் மட்டும் கொடுக்க மாதவிடாய்க்கு முன், பின் காணும் வயிற்றுவலி தீரும்.
இலைச்சாறு – 10 துளி, 10 துளி – வெந்நீர் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க வாந்தியாகி வயிற்றுப் புளிப்பு, கபக் கட்டு, கோழை நீங்கி பசியும் செரிப்புத் தன்மையும் அதிகப்படும்.

32.கழற்சி – Caesalpinia crista – CAESALPINIACEAE
கொழுந்துஇலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி இளஞ்சூட்டில் கட்டி வர விரைவீக்கம், விரையழற்சி குணப்படும்.
கழற்சி விதையும், மிளகும் சமஅளவு பொடித்துக் கலந்து 4 கிராம் அளவாக காலை மாலை சாப்பிட காய்ச்சல், குடல்வலி ஆகியவை தீரும்.

33.களா – Carissa spinarum – APOCYNACEAE
களாப் பழத்தை உணவு உண்ட பின்பு சாப்பிட உணவு விரைவில் செரிக்கும்.
தூய்மையான களாப்பூவை நல்லெண்ணெயிலிட்டு பூ மிதக்கும் வரை வெயிலில் வைத்திருந்து வடிகட்டி இரண்டொரு துளிகள் நாள்தோறும் கண்களில் விட்டு வர கண்ணிலுள்ள படலங்கள் மாறும்.

34.கறிவேம்பு – Murraya koenigii – RUTACEAE
கறிவேப்பிலைப் பொடியுடன் சர்க்கரை கலந்து காலை, மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டு வர நீர்க்கோவை, சூதக வாய்வு தீரும்.
இலை சிறிதளவு, மிளகாய் இவற்றை நெய்யில் வதக்கி பழம்புளி, வறுத்த உப்பு சேர்த்து துவையலாக்கி முதல் பிடி சோற்றில் நெய் விட்டு பிசைந்து உண்ண குமட்டல், வாந்தி, அசீரணபேதி போன்ற வயிற்றுக் கோளாறு ஆகியவை தீரும்.

35.அவுரி / நீலி – Indigofera tinctoria – PAPILINODEAE
அவுரி இலை, வேர்ப்பட்டை, பொரித்த பெருங்காயம், மிளகு சமன் சேர்த்து சுண்டை அளவு மாத்திரை செய்து 1 நாளைக்கு 3 வேளை கொடுக்க நரம்பு சிலந்தி, கீல்வாதம் தீரும்.
அவுரி இலையைக் கொட்டைப் பாக்களவு அரைத்து 250 மி.லி. வெள்ளாட்டுப் பாலில் கலக்கி வடிகட்டி அதிகாலை 3 நாள் கொடுக்க மஞ்சள்காமாலை தீரும்.

No comments:

Post a Comment

drbala avalurpet