tamil mauthuvan

கோபுரந்தாங்கி – Indoneesiela echioides – ACANTHACEAE
இலைச்சாறுடன் சமன் நல்லெண்ணெய் கலந்து பதமுறக் காய்ச்சி தலை முழுகி வர தலைமயிர் உதிர்தல் நிற்கும்.
வேரை உலர்த்திப் பொடி செய்து சமன் கற்கண்டு பொடி கலந்து காலை, மாலை ½ தேக்கரண்டி நெய்யில் சாப்பிட்டு வர எலும்பு, நரம்பு, தசை ஆகியவை வலுப்படும்.

45.சத்திச்சாரனை – Trianthema decandra – AIZOACEAE
இலைச்சாற்றை தாய்ப்பாலுடன் கலந்து கண்ணுக்கு மைபோல் தீட்டி வர கண்ணோய் அனைத்தும் தீரும்.
இலையை நெய்விட்டு வதக்கிக் கீரையாகப் பக்குவப்படுத்தி உண்டு வர பசியின்மை, வயிற்றுளைச்சல், வயிற்றுவலி ஆகியவைத் தீரும்.

46.சரக்கொன்றை – Cassia fistula – CAESALPINIACEAE
பூவை வதக்கி துவையலாக்கி உணவுடன் சாப்பிட மலச்சிக்கலும் அகலும்.
சரக்கொன்றைப் புளியை உணவுக்குப் பயன்படுத்தும் புளியுடன் சமன் கலந்து உணவு பாகங்களில் பயன்படுத்த மலச்சிக்கல் தீரும்.

47.சிற்றாமுட்டி – Pavonia zeylaica – MALVACEAE
தாதுக்களின் எரிச்சலைத் தணிக்கும் அருமருந்து.
வேர் – 10 கிராமை 100 மி.லி நீரிலிட்டு 25 மி.லியாகக் காய்ச்சி 2 சிட்டிகை திரிகடுகு சூரணம் சேர்த்து காலை, மாலை 3 நாள் கொள்ள சுரம் தீரும்.

48.சிவனார்வேம்பு – Indigofera aspalathoides – PAPILIONOIDEAE
இலையை அரைத்துப் பற்றிட கட்டிகள் உடையும் அல்லது அமுங்கி விடும்.
செடியை சுட்டு சாம்பலாக்கித் தேங்காய் எண்ணெயில் குழைத்து தடவி வர சொறி, சிரங்கு ஆகியவை தீரும்.

49.சிறுநெருஞ்சில் – Tribulus terrestris – ZYGOPHYLLACEAE
30 மி.லி சமூலசாற்றுடன் மோர் (அ) பால் கொள்ள சிறுநீருடன் இரத்தம் போதல் குணமாகும்.
நெருஞ்சில் விதையைப் பாலில் வேக வைத்து உலர்த்திப் பொடி செய்து கொண்டு காலை, மாலை கொடுத்து வர தாது கட்டும், இளநீரில் சாப்பிட்டு வர கல்லடைப்பு, நீர்க்கட்டு குணமாகும்.

50.சிறுகண்பீளை – Aerva lanata – AMARANTHACEAE
சமூலத்தை நீரிலிட்டுக் குடிநீராக்கி காலை, மாலை சாப்பிட்டு வர சிறுநீரக கற்கள் கரையும்.
சிறுபீளைச்சாறு – 50 மி.லி காலை, மாலை குடித்து வர சூதகவலி தீரும்.

51.சீந்தில் – Tinospora cordifolia – MENISPRMACEAE
முதிர்ந்த கொடிகளை உலர்த்திப் பொடித்துக் காலை, மாலை பாலுடன் சாப்பிட்டு வர உடல் உரம் பெறும். பனங்கற்கண்டுடன் சாப்பிட மதுமேகத்தால் தோன்றும் கை, கால், அசதி, மிகு தாகம், உடல் மெலிவு ஆகியவை தீரும்.

52.சீமை அகத்தி – Cassia alata – CAESALPINIACEAE
இலையை எலுமிச்சம் பழச்சாறு கலந்து அரைத்துப் பற்று போட கரப்பான், புண், புரைகள் குணமாகும்.
இலையை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி காலை, மதியம், இரவு என சாப்பிட வண்டுக்கடி, அரிப்பு ஆகியவை தீரும்.

53.சுண்டை – Solanum torvum – SOLANACEAE
சுண்டை வற்றலைக் குழம்பாக்கி உண்ண, ஏப்பம் வயிறு ஊதுதல், வயிற்றுவலி முதலியன போகும்.
காயை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி உப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, வெந்தயம் இவைகளை சிறிது கூட்டி வறுத்துப் பொடித்து உணவுடன் கொள்ள மூலம், செரியாமை தீரும்.

54.செம்பரத்தை – Hibiscus esculentes – MALVACEAE
பூவை நீரில் ஊற வைத்து வேளைக்கு 30 மி.லி. கொடுக்க சிறுநீர் நோய்கள் தீரும், உடற்கு குளிர்ச்சி தரும்.
அதிகுருதி அழுத்த நோயுள்ளவர்கள் இதன் இதழ்களை தினமும் தின்று வர குருதி சுற்றோட்டம் சீராக அமையும்.

55.தண்ணீர்விட்டான் கிழங்கு – Asparagus racemosa – LILIACEAE
இலைச்சாறுடன் சம அளவு பால் கலந்து பருகி வர உடல் வெப்பம் தணியும்.
கிழங்கைப் பொடித்து தேனில் அல்லது பாலில் இருவேளை சாப்பிட உடல் உரமாகும்.

56.தழுதாழை – Clerodendrum phlomoides – VERBENACEAE
இலையை நீரில் கொதிக்க வைத்துக் குளிக்க வாதவலி அனைத்தும் நீங்கும்.
இலைச்சாற்றை மூக்கால் உறிஞ்ச மண்டைக் குடைச்சல், மூக்கு நீர் பாய்தல் குறையும்.

57.திருநீற்றுப்பச்சிலை – Ocimum basilicum – LAMIACEAE
இலையை அரைத்துப் பூச கட்டி மறையும்
இலையை முகர்வதால் தலைவலி, தூக்கமின்மை ஆகியவை தணியும்

58.துத்தி – Abutilon indicum – MALVACEAE
இலையை விளக்கெண்ணெயில் வதக்கி இளஞ்சூட்டில் கட்டி வர இரத்த மூலம், சீழ்மூலம் ஆகியவை தீரும்.
பூவின் சூரணத்துடன் சமன் சர்க்கரை கலந்து ½ தேக்கரண்டி அளவு காலை, மாலை பாலில் கொள்ள காசம், நுரையீரல் கபம் ஆகியவை தீரும்.

No comments:

Post a Comment

drbala avalurpet