Thursday, 15 August 2019

drbala avalurpet

*மூலிகை மிட்டாய் :

பனங்கற்கண்டு - 100 கி
தண்ணீர் - 1 கப்

*அரைக்க வேண்டிய பொருட்கள்:

கற்பூரவல்லி - 2 இலைகள்
வெற்றிலை - 3
துளசி - 5
கருந்துளசி - 5
திருநீற்று பச்சிலை – 4
வில்வ இலை – 4
குப்பை மேனி - 2 இலைகள்
அருகம்புல் - 4
தூதுவளை - 6 இலைகள்
தூதுவளை - 6 பழம்
ஆடாதொடா -1/4 இலை
கல்யாண முருங்கை - 2 இலைகள்
முசுமுசுக்கை_6 இலைகள்
தும்பை - 10 இலைகள்
வேல் பருத்தி காயின் - 4 தோல் மட்டும்
நெல்லி - 1/2
கண்டங்கத்திரி பொடி - 1 சிட்டிகை
கண்டத்திப்பிலி & அரிசிதிப்பிலி - 1
ஏலக்காய் - 1
கிராம்பு - 4
பட்டை - 1 சிறு துண்டு
சித்திரத்தை - 1 சிறு துண்டு
வால் மிளகு - 10
மிளகு - 10
சுக்கு _ 1 சிறு துண்டு
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
அதிமதுரம் - 1 சிறு துண்டு

* முதலில் தண்ணீரும் பனங்கற்கண்டையும் சேர்த்து வடிகட்டவும்.

* அரைக்க வேண்டிய பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து நன்றாக வடிகட்டவும்.

* பனங்கற்கண்டுடன் அரைத்து வடிகட்டிய நீரை சேர்த்துக் அடி கனமான பாத்திரத்தில் சேர்த்து கிளறவும்.

* பதம் தண்ணீரில்  விட்டால் உருட்டும் பதம் வர வேண்டும், உருட்டி எடுத்து கீழே போட்டால் நங்குனு சத்தம் வரும் போது இறக்கி ஆறவிடவும்.

* கை பொறுக்கும் சூட்டில் சிறு சுண்டைக்காய் அளவு அனைத்தையும் உருட்டி உருண்டை பிடிக்கவும். ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்க பனங்கற்கண்டு பொடியுடன் தூவி கலந்து பத்திரபடுத்தவும்.

* இரண்டு வயதுக்கு மேல்லுள்ள குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சளி, இருமல், அஸ்துமா போன்றவைகளுக்கு....

* பெரியவர்களும் 1 கப் சூடான தண்ணீரில் கலந்து குடிக்கலாம். புத்துணர்ச்சி அளிக்கும், தொண்டைக்கு இதமாக இருக்கும்.

No comments:

Post a Comment

drbala avalurpet