Thursday, 15 August 2019

drbala avalurpet

மாதுளை ரசாயனம் :

1. மாதுளம்பழச் சாறு –  500 கிராம்
2. எலுமிச்சம் பழச்சாறு – - 500 “
3. இஞ்சிச் சாறு –  - 125 “
4. இந்துப்பு –  - 50 “
5. பனை சர்க்கரை –  - 1250 “

செய்முறை:  பழங்களையும் இஞ்சியையும் தனித்தனியே சாறுகளை வடிகட்டிக் கலந்து சர்க்கரை சேர்த்துச் சிறிது சூடாக்கி
வடிகட்டிக் கொதிக்க வைத்துப் பானகபாகத்தில் இறக்கி ஆறிய பின்னர் பொடித்து
சலித்த இந்துப்பு சேர்த்து வைத்துக் கலந்து பத்திரப்படுத்தவும்.

அளவும் அனுபானமும்:

5 முதல் 10 கிராம் வரை தண்ணீருடன் இரு வேளைகள் உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்னர்.

#தீரும்_நோய்கள்:

செரியாமை (அஜீர்ண), பசியின்மை (அக்னிமாந்த்ய), ருசியின்மை (அரோசக), வாந்தி (சர்தி), குமட்டலும், மயக்கம் (அ) தலைசுற்றலும் (ப்ரம), பித்தம் அதிகரித்தல், அதிக உமிழ்நீர் ஊறுதல் (ப்ரஸேக).

#தெரிந்து_கொள்ள_வேண்டியது ..

தயாரிப்பது மிக எளிது
கர்ப்பிணிகளின் முதல் நான்கு மாத காலத்தில் வரக்கொடிய குமட்டல்
,வாந்தி ,பசியின்மை போன்ற உபாதைகளை முற்றிலும் சரி செய்யும் -பக்க
விளைவுகள் இல்லாத மருந்து
கர்ப்பிணிகள் எந்த விதமான ஆங்கில மருந்தை -போலிக் ஆசிட் மாத்திரைகள்
,கால்சியம் மாத்திரைகள் சாப்பிடும் போதும் இதை பயம் இல்லாமல் சாப்பிடலாம்.

No comments:

Post a Comment

drbala avalurpet