Thursday, 15 August 2019

drbala avalurpet

மூலிகை சாம்பிராணி :

*சாம்பிராணி கட்டி
*தாளிச்ச பத்திரி
*பூலான் கிழங்கு
*ஜடா மஞ்சரி
*தேவாரம்
*பெரும் கோரைக்கிழங்கு

 அனைத்து பொருட்களையும் சமமளவு எடுத்துக் பொடித்தால் சாம்பிராணி தயார். இப்பொடி கொண்டு தூபமிட வீடே கமகமக்கும், திருஷ்டிகளைப் போக்கும். மேலும் வாசனைக்கு தேவைப்பட்டால் சந்தனம் சேர்க்கலாம்ங்க. கொசு, பல்லி, எட்டு கால் பூச்சி ... போன்ற பூச்சிகளை கட்டுபடுத்தும்ங்க.

வெண்குங்குலியம்
வெண் கடுகு
மருதாணி விதை
கருவேலம் பட்டை
தும்பை இலை
அருகம் புல்
வில்வ இலை
நொச்சி இலை
வேப்ப இலை
மருதாணி இலை
துளசி
தூதுவளை
கரிசலாங் கன்னி
நாயுருவி
எலுமிச்சை புல்
ஆலங்குச்சி
அரசங் குச்சி
வேப்பம் பட்டை
தசாங்கம்
கோஷ்டம்
அதிமதுரம்
வலம்புரி காய்
கடுகு ரோகிணி
விளாமிச்ச வேர்
கருங்காலி
நன்னாரி
வெட்டி வேர்
நாய் கடுகு
கல்தூரி மஞ்சள்
வசம்பு
ஜவ்வாது
அகில்

மேற்சொன்ன ஆறு பொருட்களுடன் இவைகளையும் கூட சேர்க்கலாம்ங்க.வசம்பை  மட்டும் மிக கம்மியாக சேர்க்கவும்ங்க.

*மகிஷாஷி இதை மட்டும் தனியாக சாம்பிராணி போடலாம்ங்க.

Computer சாம்பிராணி செய்ய :

*கொஞ்சம் மரத்தூள்(75g),கரித்தூள்(25 g), சாம்பிராணி (100g) பொடியுடன் கலந்து சிறிது தண்ணீர் (அ) சாதம் வடித்த கஞ்சி (அ) மாட்டு சாணம் சேர்த்து  கலந்து PVC Pipe 1 1/2 " நீளம் ,1/2 "அகலம் கொண்ட பைப்பை எடுத்து முடிந்த மட்டும் சாம்பிராணியை அதனுள் நிரப்பி ஒரு 5 நிமிடம் கழித்து சிரஞில்லுள்ள pressure Stickயை உபயோகித்து பைப்பில் வைத்து சிறிது அழுத்தினால் அழகாக பைப் வடிவில் சாம்பிராணி வெளி வரும்ங்க, அதை வெயிலில் (அ) நிழலில் காயவைத்து சேமித்து உபயோகிக்கலாம்ங்க.

No comments:

Post a Comment

drbala avalurpet