Wednesday, 14 August 2019

drbala avalurpet

சர்க்கரை வியாதி  புண்ணுக்கு களிம்பு



மயில் துத்தம் 10 கிராம்
நீல ஊமத்தை இலை 20 கிராம்
தேங்காய் எண்ணை 50 மில்லி
பூனைக்கண் குங்குலியம் 20 கிராம்

       முதலில் துத்தத்தையும் நீல  ஊமத்தை
இலையையும் நன்றாக  அரைத்து இரும்பு சட்டியில் போட்டு தேங்காய் எண்ணெய் விட்டு பக்குவமாக மணல் பருவத்தில் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்

    இதற்கு பச்சை தைலம் என்று பெயர்
இத்தைலத்தை சாதாரணமாக புண்கள்
மற்றும் கால் ஆணி பருக்களுக்கு போடலாம்

      மேற்படி இந்த தைலத்தையும் பூனைக்கண்  குங்குலியத்தை யும் சேர்த்து
நன்றாக  அரைத்து அதில் சுத்தமான தண்ணீர் விட்டு அரைக்க களிம்பாக மாறும் அக்களிம்பை கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்தவும்

    சர்க்கரை வியாதி புண்ணுக்கு  புங்கப்
பட்டை கசாயத்தால் சுத்தம் செய்து இக்களிம்பை போட்டு காற்றோற்டமாக வைத்திருக்க விரைவில் ஆறும்

    வெளியில் சென்று வர வேண்டும் என்றால் அக்களிம்பை போட்டு பேண்டேஸ்
துணியினால் லேசான கட்டு போட்டு செல்லவும்

      பூனைக்கண் குங்குலியம் பார்வைக்கு
பூனையின் கண்ணைப்போல் நிறம்
இருப்பதால் அந்த பெயர் வந்தது

No comments:

Post a Comment

drbala avalurpet