Thursday, 15 August 2019

drbala avalurpet

*திரிபலா சூரணம்:

நெல்லிக்காய் பொடி - 400 g
தான்றிக்காய் பொடி - 200 g
கடுக்காய் பொடி - 100 g

*இம் மூன்று பொடிகளையும் மேற்சொன்ன அளவுகளில் (4:2:1) நன்றாக கலந்து உபயோகிக்கலாம் (அல்லது)சமமளவு (1:1:1) கலந்தும் உபயோகிக்கலாம்ங்க.

* நெல்லிக்காய் சுத்தி முறை :

* மலை நெல்லிக்காய்களை (நாட்டு ரகம்) சுத்தம் செய்து இட்லி பாத்திரத்தில் பாலும் தண்ணீரும் சேர்த்து ஒரு 5-7 நிமிடம் வேக வைத்து உதிர்த்து விதையை எடுத்து விட்டு வெயிலில் நன்றாக காயவைத்து எடுக்கவும்,உடைத்தால் உடையும் பக்குவம் இருக்கணும், பிறகு பொடித்துக் கொள்ளவும்.

* தான்றிக்காய் சுத்தி முறை :

* தான்றிக் காயை தாழம்விழுது சாறில் ஆறு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு வெயிலில் காயவைத்து, மேற்தோலையும் ஓட்டையும் எடுத்துக் கொண்டு பொடிக்கவும்,உள்ளிருக்கும் விதையை மட்டும் எடுத்துவிடவும் அது விஷம்ங்க.

* கடுக்காய் சுத்தி முறை :

* கடுக்காயை அரிசி கழிந்த இரண்டாவது நீரில் ஒரு நாள் ஊற வைக்கவும், பிறகு வெயிலில் காயவைத்து, மேற்தோலை ஓட்டையும்  எடுத்து பொடிக்கவும்.ஓட்டிலுள்ள  நரம்புபையும்,விதையை மட்டும்  நீக்கவும் அது விஷம்ங்க.

* திரிபலா பொடியை தினமும் உட்கொள்வதால் உடலில் நோய் எதிர்ப்பு அதிகரிக்கும், மலசிக்கலை நீக்கும், வாதம், பித்தம், கபம் இம்மூன்றையும் சமநிலையில் வைதிருக்கும்.

*திரிபாலா உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.

* கர்பிணிகள் இப்பொடி உண்ணுவதை தவிர்க்கவும். சாப்பிட்டு முடித்தவுடன் வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் இப்பொடி எடுப்பதை தவிர்க்கவும்.

* முடிந்த வரை வீட்டில் செய்து உபயோகிக்கவும். கடுக்காய் (அ) தான்றிக்காய்யின் ஒரு விதையை தப்பிதவறி சேர்த்துப் பொடித்தாலும் அது விஷத்திற்கு சமம்ங்க.கடையில் விற்கும் பொருளின் தரம் எந்தளவுக்கு இருக்குமென்று தெரியாதுங்க....

No comments:

Post a Comment

drbala avalurpet