Thursday, 15 August 2019

drbala avalurpet

குங்குமாதி தைலம் :

தசமூலம் - 1 ஸ்பூன்
வெட்டி வேர் - சிறிதளவு
சிகப்பு சந்தனம் -  1 /4 ஸ்பூன்
மஞ்சிஸ்தா பொடி - 1/4 ஸ்பூன்
அதிமதுரம் - 1/4 ஸ்பூன்
குங்குமப்பூ - 3 சிட்டிகை
நல்லெண்ணை - 100ml

*அனைத்துப் பொருட்களையும் கலந்து கண்ணாடி (அ) பீங்கான் பாத்திரத்தில் ஒரு இரண்டு (அ) மூன்று நாள் வெயிலில் வைத்து எடுத்தால் குங்குமாதி தைலம் ரெடிங்க.

* இரவில் 2 - 3 சொட்டு எடுத்து முகத்தில் தடவி ஒரு 10 நிமிடம் மெதுவாக தேய்த்து விடவும், பிறகு காலையில் நலங்கு பொடி கொண்டு முகம் கழுவ நல்ல முகப்பொலிவு கிடைக்கும்ங்க.

* காலையில் பயன்படுத்த கூடாதுங்க.

*முகப்பரு, முகச்சுருக்கம், கரும்புள்ளி, கருவளையம், தழும்பு, 0pen Pores , White heads, Black heads,Sun tan இவை அனைத்தையும் சரி செய்யும்ங்க...... தொடர்ந்து பயன்படுத்த நிரந்தர தீர்வாகும்.

பாரம்பரிய முறை :

*நல்லெண்ணையை தவிர அனைத்துப் பொருட்களையும் ஒரு கப் (200ml) தண்ணீரில் சேர்த்து கசாயம் வைத்து 50ml ஆனதும் வடிகட்டி ஆறவிடவும்ங்க.

*ஆட்டுப்பால் 50ml, கசாயம் 50ml, கூட நல்லெண்ணையும் 100ml சேர்த்து காய்ச்சி தண்ணீர் வற்றி சலசலப்பு ஓய்ந்ததும், ஆறியபின் வடிகட்டி பயன்படுத்தவும்ங்க.

* நல்லெண்ணைக்கு பதில் பாதாம் ஆயில், ஆலிவ் ஆயில், jojoba ஆயில் பயன்படுத்தலாம்ங்க.

* * * கீழ்கண்ட பத்து மூலிகைகள் சேர்ந்தது தான் தசமூலம்

* வாகை, கண்டங்கத்திரி, குமிழ், நெருஞ்சில், பேராமுட்டி,சிற்றாமுட்டி, கூவிளை, சிறுவழுதுணை, முல்லை, பாதிரி.

* குங்குமாதி தைலம் என்பது 15 மூலிகைகளால் ஆனதுங்க.

* குங்குமாதி தைலம், நல்பமராதி தைலயத்தை விட சிறந்ததுங்க.

No comments:

Post a Comment

drbala avalurpet