Saturday, 24 August 2019

drbala avalurpet

அகத்தியர் இஞ்சி சூரணம்

அகத்தியர் பரிபூரணம் 400 சுவடி முறை
பாடல் எண்:311-313

அகத்திய முனிவரின் பிரதான சீடர்களில் ஒருவரான புலத்தியர் அவர்கள் மிகு பித்தம் பித்த வாய்வினால் துன்புறும் மானிடர்களுக்கு மருந்து கூற வேண்டும் குருவே என கேட்க அதற்கு அகத்திய முனிவர் அருளிய இஞ்சி சூரணம் பின்வருமாறு....

செய் பாகம்:
இஞ்சி மேல் தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி  பழ சாற்றில் ஒரு நாள் ஊறவைத்தெடுத்து வெயிலில் உலர்த்தி 500கிராம்  எடுத்துக் கொள்ளவும். அதனுடன் ஏலரிசி திரிகடுகு கிராம்பு ஓமம் வாலுவை வித்து சாதிக்காய் ஆனைதிப்பிலி சீரகம் அதிமதுரம் குரோசாணி ஓமம் பசு பாலில் புட்டவியல் செய்த அமுக்கிரா கசகசா லவங்கபத்திரி திப்பிலிமூலம் கொத்தமல்லி பேரிச்சங்காய் உலர்திராட்சை வகைக்கு 25 கிராம் வீதம் எடுத்து கொள்ளவும். அமுக்கிரா பேரிச்சம் உலர் திராட்சை தவிர மற்ற கடைசரக்குகளை மட்டும் சிறிது நெய் விட்டு பொன்னிறமாக வறுத்து
தூள் செய்து அதற்கு சம அளவு பனங்கற்கண்டு கலந்து எடுத்துக்கொள்ளவும்.

மேற்கண்ட சூரணத்தை அரை அல்லது ஒரு டீஸ்பூன் அளவிற்கு வெந்நீரில் கொள்ள

கபால பித்தத்தினால் வரும்  தலைவலி  தலைகிறுகிறுப்பு மயக்கம் கண் பார்வை மங்கல் கண் எரிச்சல் தூக்கமின்மை கனவு எதிர்மறையான சிந்தனைகள் மனபதட்டம் பயம்  கோபம் எரிச்சல் புத்தி தெளிவின்மை கிரக தோசம் முதலான மனம் சார்ந்த நோய்களும்.

குன்ம பித்தத்தால் பசியின்மை வாய் கசப்பு நா ருசியின்மை குமட்டல் வாந்தி வயிறு உப்புசம் பொருமல் மாந்தம் அசிரன பேதி மலச்சிக்கல்.

இரத்தபித்தத்தால்  இரத்தசோகை உடல் வெளுப்பு ஊதல் வீக்கம் காமலை தேக எரிச்சல் நமைச்சல் குடைச்சல் அரிப்பு வரச்சி கரப்பான் பாத வெடிப்பு மூத்திரகடுப்பு எரிச்சல் .

பித்த வாய்வினால்  இடுப்பு பிடிப்பு அதனால் உட்கார எழந்திருக்க திரும்ப சிரமம்    பாரிச வாயுவினால் கை கால் முட்டுகளில் பிடிப்பு மறுத்துபோதல் கை கால் செயல் இழத்தல்(பக்கவாதம்) முகவாதம் குதிகால் வாதம் விரை வாய்வு வீக்கம் ரூத்ர வாய்வினால் மார்ப எரிச்சல் வாய்வு பிடிப்பு வலி குத்தல் முதலான வாத நோய்களுக்கும் தீரும்.

கபால பித்தம் குன்மபித்தத்திற்கு எலுமிச்சை (அ)மாதுளம் பழசாற்றிலும். பித்தவாய்விற்கு சோற்றுப்பு (அ)பஞ்ச லவண பற்பத்துடன் கலந்து சாப்பிட நல்ல பலன்களைதரும்.

No comments:

Post a Comment

drbala avalurpet