*தீபாவளி லேகியம்*
தீபாவளி லேகியம்
1. இஞ்சி (நன்றாக விளைந்தது, மாவு இஞ்சி) – ¼ கிலோ
2. வெல்லம் – ½ கிலோ
3. நெய் – 7-8 தேக்கரண்டி
4. தேன் – 2 தேக்கரண்டி
5. தண்ணீர் – தேவையான அளவு
6. பால் – 1/2 கரண்டி
7. மூலிகை மருந்துப் பொடிகள் (தேவையெனில்) தலா ½ தேக்கரண்டி
I. அதிமதுரம்
II. சித்தரத்தை
III. துளசி
IV. அருகம்புல்
V. கண்டங்கத்திரி
VI. வில்வம்
செய்முறை
1. இஞ்சியை நன்றாக மண் இல்லாமல் அலம்பித் தோல் சீவிக் கொள்ளவும்
2. சிறிய மெல்லிய வட்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்
3. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து 2-3 தேக்கரண்டி நெய் விட்டு நறுக்கிய இஞ்சி வில்லைகளை நல்ல பொன்னிறம் வரும்வரை வறுத்துக் கொள்ளவும்
4. ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு மையாக அரைத்துக் கொள்ளவும்
5. வாணலியை அடுப்பில் வைத்துப் பொடித்த வெல்லத்தை அரை டம்ளர் தண்ணீர் விட்டுக் கரைய விடவும்
6. கொதித்து வரும்போது அரைக் கரண்டி பால் விடவும், அழுக்கு, தூசி ஒதுங்கி விடும்
7. வெல்லக் கரைசலை வடிகட்டி மறுபடி வாணலியில் விட்டு அடுப்பில் மிதமான தீயில் வைக்கவும்
8. அரைத்த இஞ்சி விழுதை அதில் விட்டு கட்டிதட்டாமல் நன்றாகக் கிளறவும்
9. மூலிகை மருந்துப் பொடிகளைச் சேர்த்து எல்லாம் சேர்ந்து வருமாறு நன்றாகக் கிளறவும்
10. கலவை மிகவும் இறுகிவிடாமல் சிறிது தளர்வாக இருக்கும் போதே அடுப்பை அணைத்து விடவும்
11. நன்றாக ஆறிய பிறகு மூடிபோட்ட பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்
இந்த மருந்து அஜீரணம், கபம், சளி, விஷ ஜுரங்கள் எல்லாவற்றிற்கும் அருமருந்தாக அமையும். எனவே தீபாவளியை ஒட்டி வீட்டில் செய்து வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

No comments:
Post a Comment