Thursday, 15 August 2019

drbala avalurpet

* Dry cleaning at home :

வெள்ளை பெட்ரோல் _  450ml
வெள்ளை வினிகர்_ 300ml
பூத்திக்காய் கரைசல்_ 75 -100 ml
ஜவ்வரிசி கஞ்சி - தேவையான அளவு
எஸ்சன்சியல் ஆயில் - 5ml

* முதல் பக்கெட்டில் கால் பக்கெட் தண்ணீருடன் வெள்ளை பெட்ரோல் (150ml), வெள்ளை வினிகர் (150ml), பூந்திக்காய் கரைசல் (100ml) சேர்த்து நன்றாக கலந்து விடவும்ங்க.

* இரண்டாவது பக்கெட்டில் கால் பக்கெட் தண்ணீருடன் வெள்ளை பெட்ரோல் (150ml), வெள்ளை வினிகர் (150 ml) சேர்த்து நன்றாக கலந்து விடவும்ங்க.

* மூன்றாவது பக்கெட்டில் கால் பக்கெட் தண்ணீருடன் வெள்ளை பெட்ரோல் (150ml), ஜவ்வரிசி கஞ்சி, எசன்சியல் ஆயில் சேர்த்து நன்றாக கலந்து விடவும்ங்க.

* சேலையை எடுத்து முதல் பக்கெட்டில் பார்டர் ( டார்க் கலர்) தனியாகவும், பாடிபாகம்(லைட் கலர்) தனியாகவும் ஜென்டிலா தேய்த்து சுத்தம் செய்யத பின்.....

* இரண்டாவது பக்கெட்டில் சேலையை நன்றாக அலசவும்ங்க பின்.....

* மூன்றாவது பக்கெட்டில் சேலையை போட்டு முக்கி எடுத்து மிக லேசாக பிழிந்து நன்றாக உதரி சுருக்கமில்லாமல் ஒத்தையாக காய வைக்கவும்ங்க.

* விருப்பப்பட்டால் ஜவ்வரிசி கஞ்சி சேர்த்தலாம் சேர்க்காமலும் நனைத்து காய வைக்கலாம்ங்க.காயந்த பிறகு அயர்ன் செய்யவும்ங்க.

* மேற்சொன்ன அளவில் 4 புடவையை சுத்தம் செய்யலாம்ங்க,சட்டைனா 8 எண்ணிக்கையை துவைக்கலாம்ங்க, நன்றாக அழுக்கு நீங்கும்.பட்டு சேலைனா சோதித்துப் பார்த்து செய்யுங்க.

No comments:

Post a Comment

drbala avalurpet