Thursday, 15 August 2019

drbala avalurpet

தேன் நெல்லி:

பெரு நெல்லிக்காய் - தேவையான அளவு
வெல்லம் - தேவையான அளவு
தேன் - தேவையான அளவு
சுண்ணாம்பு - 2 சிட்டிகை

* நல்ல முற்றின நாட்டு நெல்லிக்காய்களை எடுத்து ஐந்து (அ) அறு இடங்களில் கோனுசி கொண்டு ஒட்டை போடவும்ங்க.

* பிறகு நெல்லிக்காய்கள் முழ்கும் அளவு தண்ணீர் எடுத்து அதில் சுண்ணாம்பை கரைத்து நெல்லிக்காய்களை 8 மணி நேரம் ஊற விடவும்ங்க.

* ஊறின நெல்லிக்காய்களை 3 தடவை நல்ல தண்ணீர் விட்டு அலசவும்.... ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து 1/4 கப் வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும் கொதித்ததும் நெல்லிக்காய்கள போட்டு லேசாக மூடி Simமில் வைத்து 3 நிமிடம் மட்டும் வேக விடவும்ங்க.

* ஆறின பிறகு நெல்லிக்காய்கள எடுத்து ஈரம் போக நிழலில் உலர்த்தவும்ங்க.

* ஒரு பீங்கான் (அ) கண்ணாடி ஜாடியில் பொடித்த வெல்லம் ஒரு layer போட்டு அதன் மேல் நெல்லிக்காய்களை போடவும் பிறகு வெல்லம், நெல்லி இப்படி மாறி மாறி போட்டு கடைசியில் வெல்லம் வரும் படி இருக்கனும்.... மூடி போட்டு மூடி இரவு முழுவதும் ப்ரிஜில் வைக்கவும்ங்க.

* காலையில் வெய்யுல் வரும் போது எடுத்து காயவைக்கவும்.... மாலையில் எடுத்து அதே வெல்லப்பாகில் போடவும்... தொடர்ந்து 5 நாட்கள் இவ்வாறு செய்யவும்ங்க.

* 5 ஆம் நாள் மாலையில் மிதம்முள்ள வெல்லப்பாகை அடுப்பில் வைத்து காய்ச்சவும் ஒரு கம்பி பதம் வந்த பிறகு அடுப்பை Off செய்துவிட்டு அதில் நெல்லிக்காய்களை போட்டு லேசாக பிரட்டி விடவும்ங்க..... ஆறினதும் எடுத்து கண்ணாடி (அ) பீங்கான் ஜாடியில் போட்டு மூழ்கும்மளவு தேன் விடவும்ங்க.

* சுண்ணாம்பு சேர்ப்பதால் நெல்லிக்காய் சுருங்காதுங்க, உடையாதுங்க. வெற்றிலை,பாக்குக்கு போடும் வாய் சுண்ணாம்பை உபயோகிக்கவும்ங்க.

* இம்முறை சரியாக வரும்ங்க..... மிக மிக சத்தானது, ஆரோக்கியமானது......

No comments:

Post a Comment

drbala avalurpet