Thursday, 15 August 2019

drbala avalurpet

*உடல் எடை கூட :

கருப்பு எள்
முழு கருப்பு உளுந்து
பூசணி விதை
நில கடலை
பாதாம் இவை எல்லாம் சமமளவு எடுத்து தனித்தனியாக வறுத்து ஆறவைத்து ஒன்றாக பொடித்துக் கொள்ளவும்.தேவையானயளவு எடுத்து பாலில் கலந்து தேவைக்கு ஏற்ப பனைவெல்லமும், நெய்யும் சேர்த்து இளம் சூட்டில் தினமும் காலை உணவுக்கு முன் பருகி வரவும். சில நாட்களிலேயே உடல் பளபளப்புடன் வனப்பாகும்,உடலும் உறுதியாகும்.

* பாதாம் - 2
  பிஸ்தா - 4
  கசகசா - 2 ஸ்பூன் பாலில் ஊற வைத்து அம்மியில் அரைத்துக் கொள்ளவும்.இக்கலவையை ஒரு டம்ளர் பாலுடன் கலந்து காயச்சவும் தேவைக்கு ஏற்ப பனங்கற்கண்டு சேர்த்து இரவில் பருகலாம். இதுவும் சில நாட்களிலேயே ஒட்டிய கன்னகளில் கூட சதை பிடிக்கும்.

* சிறு கள்ளி முளையான், இஞ்சி, வெங்காயம், தக்காளி, தனியா, சிறிது தேங்காய் இவைகளை நல்லெண்ணையில் வதக்கி துவையல் செய்து மதியச் சோற்றுடன் பிசைந்து வாரம் 3 நாட்கள் சாப்பிட்டு வர சதைப் பிடிக்கும்.

* உடல் சூடு இருந்தாலும் சதை பிடிக்காதுங்க.உடல் சூடு தணிந்து உடல் எடை கூட,சோத்துக் கத்தாழை துண்டுகளை 8-10 முறை கழுவி வாழை இலையில் வைத்து பனங்கற்கண்டை பொடித்து கத்தாழை துண்டுகளின் மேல் நன்றாக தூவி விட்டு மூடி விடவும்ங்க. வாரத்தில் ஒரு நாள் காலையில் வெறும் வயிற்றில் இரண்டு துண்டுகள் சாப்பிடவும்ங்க.

* வாரத்தில் இரண்டு நாட்கள் நன்றாக காய்ந்த ஆட்டுக்காலை வேக வைத்து சூப்பில் சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், மிளகு, தனியாவை வறுத்து அரைத்து சூப்பில் கலந்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைத்து வடித்து குடிங்க...... கட்டாயம் சதை பிடிக்கும்ங்க.

* எள்ளு, ராகி, பனங்கருப்பட்டி சேர்த்து உருண்டை செய்து சாப்பிடுங்க.

* வாரத்தில் ஒரு நாள் கட்டாயம் எண்ணை தேய்த்து குளிங்க. இரவில் 9 மணிக்கு தூங்குங்க. தூங்குவதற்கு முன் உள்ளங்களில்லிருந்து கால் மூட்டு வரை சுடுநீரில் ஒத்தடம் கொடுத்து விட்டு தூங்கச் செல்லவும்ங்க.

No comments:

Post a Comment

drbala avalurpet