Thursday, 15 August 2019

drbala avalurpet

பருத்திப் பால்:

நாட்டு பருத்தி கொட்டை - 2 கப்
பனங்கருப்பட்டி - 1 - 1/2 கப்
தேங்காய் பால் - 1 கப்
தேங்காய் துருவல் - 1/4 கப்
பச்சரிசி  _ 2 - 4 டிஸ்பூன்
ஏலக்காய் - 4
சுக்கு பொடி - 1/4 டிஸ்பூன்

* பருத்திக் கொட்டையை இரவு முழுவதும் ஊற வைக்கவும், மறுநாள் காலை அரைத்து பால் எடுக்கவும்ங்க.

* பச்சரிசியை சிறிது ஊற வைத்து அரைக்கவும்ங்க.

* பருத்திப்பாலை அடுப்பில் வைத்து காய்ச்சவும் பச்சை வாசனை போக, பிறகு பச்சரிசி மாவை தண்ணீரில் கலந்து பருத்தி பாலில் சேர்த்து நன்கு வேகும்படி மிதமான தீயில் காய்ச்சவும்ங்க.

* பிறகு கருப்பட்டியை சேர்த்து கரைத்ததும் தேங்காய் பால் சேர்த்து ஏலக்காய், சுக்கு, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கி சுட சுட பரிமாறவும்ங்க.

* தயவு செய்து மருந்து அடிக்காத நல்ல நாட்டுபருத்திக் கொட்டையை பயன்படுத்துங்க.

* பெண்களுக்கு மிக மிக நல்லதுங்க..... முதுகுதண்டு வலிக்கு (L3 , L4, L5) மிக சிறந்தது. கருப்பை சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கு, மார்பக சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கு சிறந்ததொரு தீர்வுங்க. கேன்சர், வேறு கட்டிகள், மாதவிடாய் போன்ற ப்ரச்சனைகள் கிட்டவே வராதுங்க.

* தொண்டை வலி, மார்புச்சளி, வறட்டு இருமல் போன்றவைகளுக்கு பருத்தி பால் குடிங்க.வயிற்று புண்ணையும் சரிசெய்யும்ங்க.

* வாரத்தில் இரண்டு நாள் கண்டிப்பா பருத்தி பால் குடிங்க.

* பச்சரிசிக்கு பதில் வரகு, திணை, சாமை உபயோகிக்கலாம்ங்க.

* கர்ப்பிணி பெண்கள் பருத்திப் பாலைத் தவிர்க்கவும்ங்க.

No comments:

Post a Comment

drbala avalurpet