Thursday, 15 August 2019

drbala avalurpet

குங்குலிய வெண்ணை :

வெண் குங்குலியம் - 50g
நல்லெண்ணை - 100g
     (அ)
தேங்காய் எண்ணை
தண்ணீர் - 1 லி

* முதலில் குங்குலியத்தை பொடி செய்யவும். மிதமான தீயில் அடி கனமான பாத்திரத்த வைத்து  நல்லெண்ணையுடன்  குங்குலியப் பொடியை சேர்த்து கிளறவும்ங்க.

* முழுவதும் கரைத்து எண்ணையுடன் சேர்ந்து வந்த பிறகு வடிகட்டிய பயன்படுத்தி 1லி தண்ணீர் உள்ள பாத்திரத்தில் வடிகட்டி ஊற்றவும்ங்க.

* மரமத்தை பயன்படுத்தி கடைய வேண்டும்ங்க .... கடைய கடைய வெண்ணை திரண்டு வரும்ங்க. இதுமாதிரி ஏழு முறை தண்ணீரை மட்டும் மாற்றி  மாற்றி கடைந்து எடுத்தால் குங்குலிய வெண்னை (200g)தயார்ங்க.

* இதை சேகரித்து ஒரு கண்ணாடி பாட்டலில் போட்டு கூட தண்ணீரும் சேர்த்து மூடி வைத்து 6 மாதம் வரை பத்திரப்படுத்தலாம்ங்க. கட்டாயம் வாரம் ஒருமுறை தண்ணீரை மாற்றவும்ங்க.

* குங்குலிய சுத்தி :

குங்குலியத்தை எலுமிச்சை சாற்றில் முழ்கும் அளவு ஊற்றி வெயிலில் வைத்து எடுக்கவும் சாறு முழுவதும் வற்றும் வரைங்க.

பயன்கள்:

உள் மருத்தாக 3g - 5g காலை, மாலை எடுக்கலாம்ங்க.

*வெள்ளை படுத்தல், அதிக ரத்தப் போக்கு, கணச் சூடு, அல்சர், சிறு நீர் தொற்றுக்கு........கேட்கும்ங்க

வெளி மருந்தாக மேற்பூச்சாக பூசலாம்ங்க.

* தீப்புண்ணுக்கு ..... தீக்காயம் பட்டவுடன் ஒரு மணி நேரத்திற்குள் அப்புண்ணுக்கு மருந்திட புண் விரைவில் குணமாகும் மேலும் வடுவும் வராதுங்க.

* வேனில் கட்டி, முகப்பரு, புண்கள், படுக்கை புண்கள், பாத வெடிப்பு,குஷ்டம் ...... போன்றவைகளுக்கு மிக மிக நன்றாக கேட்கும்ங்க.

No comments:

Post a Comment

drbala avalurpet