Wednesday, 14 August 2019

drbala avalurpet

கற்றாழை அல்வா:-
-------------------
தேவையானவை:
----------------
சோற்றுக் கற்றாழை - கால் கிலோ, முந்திரி, பாதாம் பருப்பு - தலா 100 கிராம், சுக்கு - 20 கிராம், ஏலக்காய் - 25 கிராம், நாட்டு வெல்லம் - அரை கிலோ, நெய், தேன் - தலா 2 டீஸ்பூன்.

செய்முறை: -
------------
தோல் நீக்கிய சோற்றுக் கற்றாழையை அரிசி கழுவியத் தண்ணீரில் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் கற்றாழையைப் போட்டு வேகவைக்கவும். முந்திரி, பாதாம் பருப்பு, சுக்கு, ஏலக்காயை வெறும் வாணலியில் சிவக்க வறுத்துத் தூள் செய்து, கற்றாழையுடன் சேர்க்கவும். கற்றாழை நன்றாக வெந்ததும் வெல்லத்தை நன்றாகப் பொடித்து, அதில் சேர்க்கவும். அடிப்பிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்கவும். அல்வா பதம் வந்ததும் நெய், தேனை ஊற்றி நன்றாகக் கிளறி கீழே இறக்கவும்.

மருத்துவப் பயன்: -
----------------
வெள்ளைப்படுதல், கருப்பைப் புண், பால்வினை நோய்களைக் குணப்படுத்தும். எலும்புருக்கி நோய்க்கு மிகச் சிறந்த மருந்து. உடல் உஷ்ணத்தைக் குறைத்து குளிர்ச்சியை உண்டாக்கும். பார்வைக் கோளாறுகளைச் சரிசெய்யும். குடல் கிருமிகளை அகற்றும். மெலிந்த தேகம் கொண்டவர்களுக்கு வலிமை தரும்.

No comments:

Post a Comment

drbala avalurpet