Monday, 9 September 2019

drbala avalurpet

ஆடுதீண்டாபாலை. இது ஒரு அற்புத மூலிகை  குறிப்பாக பெண்களின் கருப்பை நோய்களாக சூதகவலி (மாத விலக்கு நேரத்தில் வரும் தாங்க முடியாத வலி), கருப்பை கட்டிகள், சினைப்பை நீர்கட்டிகள், மலட்டுப்புழு, சூதக வாய்வு போன்றவைகளுக்கு அற்புத குணமளிக்கும். இக்காலத்தில் பெண்களை பெரிதும் வாட்டி வதைக்கும் ராட்சசனாக மாதவிலக்கு காலத்தில் வரும் வலி உள்ளது.
இதற்குரிய மருந்து
1.ஆடுதீண்டாபாலை இலை 5கிராம்,
2.மிளகு 1கிராம்,
3.சீரகம் 1கிராம்,
4.மஞ்சள் தூள் 1கிராம்,
5.வசம்பு 1கிராம்.
ஒன்றாக சேர்த்து மைய அரைத்து வீட்டு விலக்கான முதல் நாள் கொடுத்து சிறிது சர்கரை கையில் கொடுத்து விழுங்க சொல்ல வேண்டும். ஒருசிலருக்கு வாந்தியாகும் இதனால் குற்றமில்லை. நான் இம்மருந்து கொடுத்ததில் 8/10 பேருக்கு அடுத்த மாதத்திலிருந்து வலி வந்ததில்லை. அப்படி மறுமுறை வலிவந்த சிலருக்கு கருப்பை சதைகட்டியும் சிலருக்கு இரத்த சோகையும் இருந்தது. பின்னர் அதற்கான மருந்தை கொடுத்து சரி செய்தேன்.  

No comments:

Post a Comment

drbala avalurpet