Monday, 9 September 2019

drbala avalurpet

மண்டூரக் கஷாயம்:-

தே.பொருட்கள்:-
சங்கன் வேர்
சிறுநெருஞ்சில் சமூலம்
சாரணைவேர்
கோவைத்தண்டு,
நீர்முள்ளிச் சமூலம்
புளியிலை
கண்டங்கத்திரி வேர்
கொன்றைப்பட்டை
விழுதிக்கீரை
மணலிக்கீரை
ஆடுதின்னாப்பாளைச் சமூலம்
நன்னாரி வேர்ப்பட்டை
சுரைக்கொடி
தான்றிக்காய்த்தோல்
நெல்லிவற்றல்
கடுக்காய்த்தோல்
கற்றாழைவேர்
வேப்பம்பட்டை
கறிமஞ்சள்
செங்கத்தரிப்பட்டை
பாதிரிப்பட்டை
சிறுகுறிஞ்சான் வேர்
இரும்புச் சிட்டம்
அரப்பொடி.

இவைகளை எல்லாம் ஒரு பெரிய மண் பானையில் ஒவ்வொரு பலம் (35 கிராம்) வீதம்
இட்டு, புளிப்புத் தண்ணீரும் பசுநீரும் கலந்து எட்டுப்படி (10.4 லிட்)
விட்டு ஒரு படியாக (1.3 லிட்டர்) காய்ச்சி, நோய்வன்மைக்கும் உடல்
வன்மைக்கும் தக்கபடி இருவேளையாவது ஒருவேளையாவது குடித்துக்கொண்டு வந்தால்
பெருமல், வீக்கம், வயிற்றிலுண்டாகும் கட்டிகள், உப்புசம் ஆகிய இவைகள்
நீங்கும்.

No comments:

Post a Comment

drbala avalurpet