திரிகடுகு லேகியம்
தேவையான பொருட்கள்
சுக்கு - 100
மிளகு - 100
திப்பிலி - 100
சீரகம் - 50
ஏலம் அரிசி - 50
கிராம்பு - 50
பனைவெல்லம் - 400
நெய் - 250
தேன் - 250
செய்முறை
சுக்கை தோல் நீக்கி மஞ்சளை தண்ணீரில் குழைத்து சுக்கு மீதி கவசம் செய்து வெயிலில் காயவைத்து, காய்ந்ததும் மஞ்சளை நீக்கி பொடித்து கொள்ளவும்.
மிளகை புளித்த மோரில் ஊறவைத்து மோரில் தாழ்ந்த மிளகை எடுத்து முசுமுசுக்கை சாற்றில் 3 முறை பாவனை செய்து காயவைத்து பொடித்துக் கொள்ளவும்.
திப்பிலியை கொடிவேலி சாற்றில் ஊறவைத்து காய்ந்ததும் பொடித்துக் கொள்ளவும்.
சீரகத்தை சுண்ணாம்பு தெளிநீரில் ஊறவைத்து காய்ந்ததும் பொடித்துக் கொள்ளவும்.
ஏல அரிசியை தூசு துப்பு நீக்கி பொடித்து கொள்ளவும்.
கிராம்பை இளவறுப்பாக வறுத்து பொடித்துக் கொள்ளவும்.
முதலில் பனைவெல்லத்தை சுண்ணாம்பு தெளி நீரில் கரைத்து வடிகட்டி பாகு காய்ச்சிக் கொள்ளவும். பிறகு மேலுள்ள சூரணங்களை சேர்த்து கலக்கி லேகிய பதத்தில் இறக்கி நெய் மற்றும் தேன் சேர்க்கவும்.
பயன்கள் : பசியின்மை, வயிற்று பொருமல், சளி,இளைப்பு, இருமல், வறட்டு இருமல், பீனிசம், நீர் ஒழுகல், காய்ச்சல் , முறை காய்ச்சல், செரியாமை, பசியின்மை, நெஞ்செரிச்சல், மயக்கம், பித்த கிறுகிறுப்பு, வாந்தி,கோழையை அகற்றும், என்புசுரம், என்பு வெட்டை வாத பித்த கபநோய்கள் தீரும், சுருங்கச் சொன்னால் முக்குற்றதையும் சரி செய்யும்.
பத்தியம் : புளி, புகை, கசப்பு சுவையுள்ள பதார்த்தங்கள் ஆகியவை தவிர்க்க மேலான குணத்தை தரும்.
அளவு : 2 கிராம் முதல் 5 கிராம் வரை
வேளை : 2 முதல் 3 வேளை
குறிப்பு : சங்கு, சிலாசத்து, பவளம், முத்து, சிருங்கி, கஸ்தூரி கருப்பு போன்ற மருந்துகளை இதில் வைத்து கொடுக்க ஆஸ்துமா வெகு விரைவில் குணமாவது திண்ணம்.
இது கடைகளில் தற்போது லேகியமாக கிடைபதில்லை. குருநாதரின் கைகண்ட மருந்து.

No comments:
Post a Comment