Monday, 9 September 2019

drbala avalurpet

சிலாசத்து பற்பம்

தேவையான பொருட்கள்

சிலாசத்து - 1/2 கிலோ
தென்னங்கள் - தேவையான அளவு

சிலாசத்து கற்களை சுண்ணாம்பு தெளிநீர், கற்றாழை , இளநீர், அரிசி கழுவிய தண்ணீர் இவற்றில் எதாவது ஒரு முறையில் சுத்தி செய்துக் கொள்ளவேண்டும்.

சிலாசத்து கற்களுக்கு சுண்ணாம்பு சீலை செய்து வரட்டியில் புடமிட பற்பமாகும். பிறகு பற்பத்தை தென்னங்கள் ஊற்றி நெகிழ அரைத்து வில்லை தட்டி காய வைத்து அகலில் அடுக்கி சீலை செய்து காயவைத்து புடமிட பற்பமாகும். மீண்டும் தென்னங்கள் ஊற்று நெகிழ அரைத்து இவ்வாறு  3 முறை புடமிட உயர்ந்த சிலாசத்து பற்பமாகும். இந்த பற்பத்தை நெழிக அரைத்து புட்டியில் அடைக்கவும்.

அளவு : 2௦௦ மில்லி கிராம் முதல் 400 மில்லி கிராம் வரை

அனுபானம் : நெய், வெண்ணை, மோர், பால், வெந்நீர் மேலும் பல...

பயன்கள் : வெள்ளை, வெட்டை, நீர் கட்டு, நீர்க் கடுப்பு, பித்த வியாதிகள் , கல்லடைப்பு, உடல் உஷ்ணம், சிறுநீரில் இரத்தம் வருதல், மேலும் நோய்களுக்கு ஏற்ற அனுபானங்களில் கொடுக்க சகல நோய்களுக்கும் கொடுக்கலாம்.

பத்தியம் : புளி, காரம் நீக்கி உணவு உட்கொள்ளவும்.

உயர்ந்த முறைகளில் இதுவும் ஒன்று. வைத்தியர்களிடம் இருக்க வேண்டிய மருந்துகளில் இதுவும் ஒன்று.

No comments:

Post a Comment

drbala avalurpet