Monday, 9 September 2019

drbala avalurpet

மகா பூபதி மாத்திரை:

           சரக்குகள்: பவளபற்பம் 1 பங்கு, வெங்கார பற்பம் 2 பங்கு, சிருங்கி பற்பம் 3 பங்கு, ஆமையோடு பற்பம் 4 பங்கு, முத்துச் சிப்பி பற்பம் 5 பங்கு, நண்டுக்கல் பற்பம் 6 பங்கு, படிகார பற்பம் 7 பங்கு, சங்கு பற்பம் 8 பங்கு, பலகரை பற்பம் 9 பங்கு, சிலாசத்து பற்பம் 10 பங்கு.

செய்முறை:
                        இங்கு கூறப்பட்டுள்ள பற்ப வகைகள் எந்த முறையில் செய்யப்பட்டிருந்தாலும் குற்றமில்லை.அளவுப்படி எடுத்து எலுமிச்சைச் சாறு, பால் ,இளநீர் இவற்றில் தலா இரண்டு மணி நேரம் அரைத்து உலர்த்தி சமம் சீந்தில் சர்க்கரை சேர்த்து கலந்து ஜீரோ சைஸ் கேப்சூலில் போட்டு வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம்.

தீரும் நோய்கள்:

                      பத்து, பதினைந்து நாளில் கல்லடைப்பு குணமாகும்.ஆப்பரேசன் தேவையில்லை.

சதையடைப்பு எனும் புரஸ்டேட் சுரப்பி வீக்கம் குணமாகும்.இது 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு ஏற்படும் நோய் ஆகும்.

சயம், காசம், இருமல், இளைப்பு ஈளை(T.B) அஸ்தி காங்கை குணமாகும்.

சூலை, வயிற்றுவலி, மார்வலி, பக்கவலி, அல்சர், வயிறு எரிச்சல், கைகால் எரிச்சல்,நெஞ்சு எரிச்சல் குணமாகும்.

வெள்ளை வெட்டை, மேகவெப்பம்,வெள்ளைப்படுதல் நீர்த் தாரைக் குற்றங்கள் குணமாகும்.

கல்லீரல் வீக்கம், கல்லீரல் குலை கட்டி, குழந்தைகளுக்கு ஏற்படும் பலவித நோய்கள்  போன்ற நோய்கள் குணமாகும்.

துணை மருந்துகள்:

                                        பால்,வெண்ணெய், தேன், பலவித கசாயங்கள் போன்றவை.

இணைமருந்துகள்:

                                    அந்தந்த நோய்க்கு தகுந்த மருந்துகள்.

No comments:

Post a Comment

drbala avalurpet