கேசரி இலேகியம்
தேவையான மருந்துகள்:
1. எலுமிச்சம் பழம் எண்ணிக்கையில் 200
2.மிளகு 180 கிம்
3. சீரகம் 180 ""
4. கோஷ்டம் 15 ""
5. சுக்கு 15 ""
6. தாளிசம் 15 ""
7. திப்பிலி 15 ""
8. சாதிக்காய் 15 ""
9. சாதிப்பத்திரி 15 ""
10. நெய் 240 ""
11. சர்க்கரை, எலுமிச்சை சாற்றின் எடைப்போல் இரண்டுமடங்கு.
செய்முறை:
நெ. 2 முதல் 9 சரக்குகளையும் பொடித்து சலித்து வைக்கவும். எலுமிச்சம் பழங்களை வதக்கிப் பிழிந்து வடிகட்டி பழச்சாற்றின் எடைக்கு இரண்டு மடங்கு சர்க்கரையைச் (நாட்டு சர்க்கரை)சேர்த்துக் காய்ச்சிப் பாகுபதத்தில் இறக்கிச் சரக்குகளின் சூரணத்தைச் சேர்த்துப் பின்னர் நெய் சேர்த்து நன்கு கலந்து பத்திரப்படுத்தவும்.
அளவு: 3-----6 கிராம் வீதம் தினமும் இரு வேளைகளுக்குக் கொடுக்கவும்.
தீரும் நோய்கள்: வாந்தி, மயக்கம், அசீரணம், கண், பாதம் எரிச்சல், நாற்பதுவகைப் பித்தம், நிணக் கழிச்சல் ஊதல் (சோபை) ஆகியவை குணமாகும்.
No comments:
Post a Comment