Wednesday, 7 August 2019

drbala siddha

கருடன்கிழங்கு எண்ணெய்:

கருடன்கிழங்கு                         4200. --   gm

வாய்விளங்கம்                              35. --   gm

வாளுலுவை                                   35. --   gm

சுக்கு                                                 35. --   gm

மிளகு                                              35. --   gm

திப்பிலி                                            35. --   gm

கருஞ்சீரகம்                                      35. --  gm

   இவைகளை எல்லாம் இடித்து 4 படி சலத்திலிட்டு 1/2 படியாகச் சுண்டக்காய்ச்சி வடிகட்டி அதனுடன் 1 படி  சிற்றாமணக்கு எண்ணெய்   கூட்டி அடுப்பிலேற்றி அதனில் 4200 கிராம்  வெள்ளை வெங்காயத்தை சிறு துண்டுகளாக அரிந்துப்போட்டுச் சிறு தீயாக எரிக்கவும். வெங்காயம்  நன்றாய் வெந்து மிதக்கும் சமயம் வடிகட்டிப் பத்திரப்படுத்துக.
 
  இதனைத் தினமும் ஒருவேளை 1/2 -- 1 அவுன்ஸ் வீதம் தேக திடத்திற்கேற்றவாறு கொடுத்துவர வெள்ளை, வெண் தேமல், அரையாப்பு, கொறுக்கு, குட்டம், மேகரணம் முதலியவைகள் போகும்.

 இதற்கு நல்லெண்ணெய், கடுகு,புளி முதலியவற்றை தள்ளி பத்தியம் இருப்பது நலம்.
__________________________________________

No comments:

Post a Comment

drbala avalurpet