Tuesday, 6 August 2019

drbala siddha

புருஷ ரத்தின குளிகை:-

தே.பொருட்கள்:-
வெள்ளைக் குன்றிமணி – 20 கிராம்
சுத்தி செய்த லிங்கம் – 10 கிராம்
குங்குமப்பூ – 2 கிராம்

     வெள்ளைக் குன்றிமணியை உடைத்து, வெள்ளாட்டுப்பாலில் ஓரிரவு முழுக்க ஊற வைத்து மேல் தோல் மற்றும் அதன் முனைப்பகுதியை நீக்கிவிடவும். பின் நன்கு காய வைத்து தூள் செய்யவும். இத்துடன் சுத்தி செய்த லிங்கம், குங்குமபூ இரண்டையும் தூள் செய்து கலந்து கொள்ளவும். கோழி முட்டையின் முனைப்பகுதியில் துவாரமிட்டு மேர்படி சூரணத்தை அதில் சேர்த்துக் குழப்பி முட்டை சாய்ந்துவிடாதபடி பாத்திரத்தில் வைத்து நீர் ஊற்றி அவித்து எடுக்கவும்.

     முட்டையின் தோலை நீக்கி, பந்துபோல் திரண்டிருக்கும் மருந்தை, மைய அரைத்து பட்டாணி அளவு மாத்திரை செய்து உலர்த்திப் பத்திரப்படுத்தவும்.

     காலை, இரவு உணவுக்குப்பின் 1 மாத்திரை வீதம் சாப்பிட்டு வர 80 வயதுக் கிழவருக்குக்கூட குறி எழுச்சி ஏற்படும். இளமைத் துடிப்பு உண்டாகும். தாம்பத்திய சுகத்தில் திருப்தி பெற மேற்கண்ட புருஷ ரத்தின மாத்திரை ஆண்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.


No comments:

Post a Comment

drbala avalurpet