#உயர்ந்த_தங்க_செந்தூர_முறை
சுத்தி செய்த லிங்கம் 40 கிராம்
சுத்தி செய்த சேங்கொட்டை 200 கிராம்
வெள்ளை குன்றி மணி விதை 100 கிராம்
நெய் 300 கிராம்
புரசம் பூச்சாறு 300 மில்லி
1 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்த வெள்ளை குன்றி மணி விதையை நன்கு அரைத்த விழுதாக்கி, சுத்தி செய்த 40 கிராம் லிங்கத்திற்கு கவசம் செய்து நன்கு வெயிலில் காய வைத்து பின் அதை
ஒரு இரும்பு சட்டியில் கீழே 25 கிராம் சேங்கொட்டை அதன் மேல் லிங்கம்
அதன் மேல் 25 கிராம் சேங்கொட்டை வைத்து அதன் மேல் 125 கிராம் நெய் ஊற்றி தீயெரிக்க சிறிது நேரத்தில் தீப்பற்றி
எரியும். ஆறிய பின்பு லிங்கத்தை பிரித்து அதில் உள்ள கருப்பாக உள்ள கசடுகளை நீக்கிவிட்டு நிறுத்துப் பார்க்க லிங்கம் எடை குறையாது பாதி கட்டாக இருக்கும்.
பின்பு அந்த லிங்கத்தை தண்ணீர்விட்டால் சாற்றில் நன்கு அரைத்து சின்னக் கொழுக்கட்டை வடிவில் உருட்டி உளர்த்தி; அதன்மீது நன்கு அரைத்த குணடு்மணிப் பசயை லேசாகத் தடவி,
4 கிராம்
#தங்கத்_தகட்டை படத்தில் உள்ள படி இல்லாமல் இன்னும் நயமாக ஈசலிறகு மாதிரி (#தங்கரேக்கு) செய்து லிங்கத்தின் மேல் ஒட்டி
மீதமுள்ள குண்றி மணி விழுதையும் பூசி காயவைத்து
முன்போல் இரும்பு சட்டியில் அடியில் 25
கிராம் சேங்கொட்டையும் அதன் மேல் லிங்கம் அதன் மேல் சேங்கொட்டை, பின் 125 கிராம்
நெய் ஊற்றி முன் போல் எரித்து ஆறிய பின் கவனமாக பிரித்து பார்க்க லிங்கம் தங்கத்தை உள்வாங்கி எடை குறையாமல்
44 கிராம் இருப்பதுடன் முழு கட்டாக இருக்கும. இதில் எது தவறுதலாக இருந்தாலும் உங்களுடைய கவனக் குறைவாக இருக்கும்.
பின் புரசம் பூவை தண்ணீர் ஊற்றாமல் சாறு 300 மில்லி எடுத்து சிறுக சிறுக ஊற்றி
1 2 மணி நேரம் அரைத்து அதை ஒரு புது
மண் ஓட்டில் வைத்து ஈரம் வற்ற எடுத்து
அதை 45 கிராம் காய்ந்த புரசம் பூ சூரணம் சேர்த்து நன்கு அரைத்து பூஜை செய்து பயன் படுத்த வேண்டும்
No comments:
Post a Comment