#தூதுவளைலேகியம் #செய்முறை
தேவையான பொருட்கள் :
தூதுவளை சமூலம் (தலை முதல் கால் வரை) – 1 கிலோ
ஆடாதொடை – 200 கிராம்
துளசி – 100 கிராம்
ஓமவல்லி – 100 கிராம்
கண்டங்கத்திரி – 50 கிராம்
இன்பூரல் – 50 கிராம்
சுக்கு – 25 கிராம்
மிளகு – 25 கிராம்
சித்தரத்தை – 25 கிராம்
அதிமதுரம் – 25 கிராம்
இஞ்சி சாறு – 50 மில்லி
பனைவெல்லம் – 1 கிலோ
தேன், நெய் தேவையான அளவு
மேற்கண்ட பச்சை மூலிகைகளை சேகரித்து ஒன்று இரண்டாக உரலில் விட்டு இடித்து 2 லிட்டர் நீர் விட்டு 1 லிட்டர் ஆகும் வரை நன்கு காய்ச்ச வேண்டும். சுக்கு, மிளகு, சித்தரத்தை, அதிமதுரம் ஆகியவைகளை இளம் சூடாக வறுத்து நன்கு இடித்து இரும்புச்சட்டியில் லேசக வறுத்து வஸ்திர காயம் செய்து கொள்ளவும்.
இஞ்சியை இடித்து 50 மில்லி சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். மூலிகை வேகவைத்த சாறு 1 லிட்டர் இஞ்சி சாறு 50 மில்லி இவைகளை ஒன்று சேர்த்து பனை வெல்லம் சேர்த்து அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும். பனைவெல்லம் கரைந்ததும், சாறை வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து முதிர் பாகு பதம் வரும் வரை காய்ச்ச வேண்டும். முதிர் பாகு பதம் வந்தவுடன் வஸ்திர காயம் செய்து வைத்திருக்கும் சூரணத்தை அதில் போட்டு நன்றாக கலந்து நெய்விட்டு நன்றாக கிளர வேண்டும். பின்பு ஆறவைத்து சிறிது தேன் கலந்து பயன்படுத்தவும்.
தீர்வு : சளி, இருமல்,தொண்டை கரகரப்பு,அடுக்கு தும்மல்,வயிற்று பெருமல், ஆஸ்துமா
நாள் ஒன்றுக்கு உணவிற்குப்பிறகு 3 வேளை நெல்லிக்காய் அளவு பயன்படுத்தவும்.

No comments:
Post a Comment