#கரந்தைச்சூரணம்.!
கொட்டக் கரந்தையை காய்க்காத செடியாக சேகரித்து நிழலிலுலர்த்தி இடித்த சூரணம் 350 கிராம்.
கருஞ்சீரகம்
கடுக்காய்த் தோல்
தான்றிக்காய்த் தோல்
வசம்பு
திப்பிலி
மிளகு
இந்துப்பு
வாலுழுவை
கோஷ்டம்
சுக்கு
சிறுதேக்கு
கார்போகரிசி (சம்மங்கி விதை)
கொடிவேலி வேர் பட்டை
இவைகள் வகைக்கு 35 கிராம் இடித்து சூரணம் செய்து, (சுத்தி செய்த இரச கற்பூரம்) 9 கிராம் எடுத்து நன்றாக அரைத்து, முன் சூரணத்துடன் நன்கு கலந்து பனை வெல்லம், தேன் சம அளவு சேர்த்து நாட்டு மாட்டு நெய் விட்டு கிண்டி வைக்கவும்.
தினம் காலை மாலை இருவேளை பெரிய கொட்டைப் பாக்களவு சாப்பிடவும்.
தீரும் வியாதிகள் :
எயிட்ஸ் (HTLV-|||) குஷ்டம், கிரந்தி, (அரையாப்பு VDRL சீக்கு) மேக வெடி, கரப்பான், நெஞ்சடைப்பு, வெளுப்பு நோய், துடி நோய், படர் தாமரை, பவுத்திரம், புண்புரை, ரணம், குழிவாழை, அழுக்கிரந்தி, சொரி, ஆனைச் சொரி, தவளை சொரி, தேமல், வெடி கரப்பான் போன்ற பல வியாதிகள் தீரும். இது ஒரு கல்ப மருந்து.
No comments:
Post a Comment