Wednesday, 7 August 2019

drbala avalurpet



*அற்புத  சர்க்கரை  அமுது*

1  )   காந்தம்
2  )   கருடக்கல்
3  )   கல்மதம்
4  )   கல்நார்
5  )   கற்பூர சிலாசத்து

ஐயா  இந்த  சரக்குகள்  அனைத்தையும்  சுத்தி  செய்து
எடுத்துக்கொண்டு .

1  )   அரசம்  பட்டை
2  )   ஆலம்  விழுது
3  )    கரு  வேலம்  பட்டை
4  )   சரக்கொண்றை பட்டை
5  )   கடழலிஞ்சி  பட்டை
6  )   ஆவாரம்  பட்டை
7  )   கடுக்காய்
8  )   நெல்லிக்காய்
9  )   தாண்றிக்காய்
10)   சிமை  காசிக்கட்டி

இந்த  பத்து  சரக்கையும்  சிறு
துண்டுகளாக  வெட்டி  இடித்து
ஒரு  பெரிய  மண்பாணையில்
போட்டு  ஒன்றுக்கு  மூன்று
மடங்கு  தண்ணீர்  ஊற்றி
ஊறவைத்து  தண்ணீர்  வடி
போடும்  ஜல்லடையால்
வடித்து  எடுத்த  நீரை  மூன்றில்  ஒன்றாக  சுண்டவைத்து  எடுத்த  நீரைக்
கொண்டு  மேற்கண்ட   ஐந்து
சரக்கையும்  அரைத்து  பில்லை  தட்டி  காயவைத்து
அகலில்  வைத்து  மேலகல்  மூடி  சீலைமண்  செய்து  புடமிடவேண்டும்  இதே  போல்
ஏழு  முறையும்  கசாயம்  வடித்தும்  அரைத்தும்  புடமிட்டும்  கொண்டு  வரவும்


ஊறவைக்கும்  சரக்குகள் பத்தும்  வகைக்கு  .. 300 ..
கிராம்  அளவு

அரைத்து  புடமிடும்  சரக்குகள்
ஐந்தும்  வகைக்கு  .. 200 ..
கிராம்  அளவு

ஏழுமுறை  புடமிட்டு  எடுத்த
மருந்து  முருக்கண்  பூ  வின்
நிறத்தில்  இருக்கும் .

இந்த  மருந்து  எடைக்கு  சரிபங்கு .. சீந்தில் சர்க்கரை ..
சேர்த்து  ஒன்றுபட  கலந்து
அரைத்து  தினம்  மூன்று
வேலைகள்  பட்டாணி  அளவு
நெய்யில்  சாப்பிட வேண்டும்


முதல்  மாதம்  மூன்று வேலையும்  இரண்டாம்  மாதம்
இரண்டு  வேலையும்  மூன்றாம்  மாதம்  ஒரு  வேலையும்  மருந்து  சாப்பிடவும் .இந்த  மருதில்
சித்தர்களின்  ஆசிர்வாதம்
இருக்கிறது  சாப்பிடுபவர்களுக்கு  மட்டுமே
தெறியவரும்  .

தீரும்  நோய்கள் =
இரத்தத்தில்  சர்க்கரை . மூத்திரத்தில் சர்க்கரை .
உடல்  அசதி .  சோர்ந்து  போவது  .  உடல்  முழுவதும்
வழி  ..  மனதடுமாட்டம் ..
சர்க்கரை  நோயால்  உடம்பில்
ஏற்படும்  அத்தனை  பிரச்சனைகள்  தீரும் ..

No comments:

Post a Comment

drbala avalurpet