Tuesday, 6 August 2019

dr bala siddha

*குடும்ப லேகியம்
தாது புஷ்டிக்கு*

அமுக்கிரா கிழங்கு 20 பலம்
சுக்கு 8 பலம்
மிளகு 5 பலம்
திப்பிலி  2 1/2 பலம்
ஏலம் 1 1/2 பலம்
கிராம்பு 1/2 பலம்
சிறு நாகப்பூ1 பலம்
சித்திரமூலம் வேர் 2 பலம்
சாதிக்காய் 2 பலம்
லவங்கப்பத்திரி 1 பலம்
செவ்வியம் 2 பலம்
பேரிச்சங்காய் 16 பலம்
திராட்ச்சைபழம் விதையில்லாதது 10 பலம்
வெள்ளை சர்க்கரை 20 பலம்
தேன் 15 பலம்
பசு நெய் 20 பலம்
பால் 2 1/2 படி
முதல் 12 சரக்குகளையும் வெயிலில் வைத்து உலர்த்தி இடித்து வஸ்திரகாயம் செய்து கொள்ளவும்
சர்க்கரையை பாலில் கரைத்து அடுப்பில் ஏற்றி சிறு தீயாக எரித்து பாகுபதத்தில் மேலே தயார் செய்துள்ள சூரண பொடிகளை தூவி கிளரி விட்டு இறக்கும் போது தேன் விட்டு கலந்து லேகியப்பதத்தில் சீசாவில் பத்திரப்படுத்தவும்
இதை வேளைக்கு சுண்டைக்காய் அளவு பசுவின் பாலுடன் சாப்பிட்டு வர *அக்னி மந்தம் அஸ்தி சுரம் நீங்கும் தாதுபுஷ்டி* உண்டாகும்

* பாரம்பரிய மருத்துவ குடும்பத்தில் கையாண்டு வரும் முறை

No comments:

Post a Comment

drbala avalurpet