Wednesday, 7 August 2019

dr bala siddha

** செந்நாயுருவி கற்பம் **
    மரணத்தை வெல்ல முடியுமா?
  'முடியும் என்கிறார் அகத்திய முனிவர்'

போச்சப்பா பிறப்பு இறப்பு மாண்டு போகும்
 புகழுடைய வரதனைப் போல் மேனியாகும்
வாய்ச்சுது பார் வாசியது நிலைத்துப் போகும்
 மகத்தான காயமது வலுத்துப் போகும்
கூச்சமுற்றே துர்க்குணம் நற்குணங்களாகும்
 கோடானு கோடி யுகம் வாழலாகும்.

பச்சை நாயுருவி ஆண்மூலம், முழுவதும் சிவப்பு நிற செந்நாயுருவி பெண்மூலம் கல்பமூலி,
  இதன் அரிசியும், கருந்துளசி விதையும் சேர்ந்திட பெருத்த வயிறு  வத்தி வலுவாகும், பசி எடுக்காது தேகம் சோர்வடையாது, சளி இருமல் ஆஸ்துமா போன்ற நோய்கள் அனைத்தும் தீரும்,  சீரகமிளகு குடிநீரால் பசியுண்டாக்கும்.
   செந்நாயுருவி சக்தியின் வடிவம், இதன் சாம்பலை சிவனாருக்கு ஒப்பானது என்கிறார் கருவூரார் சித்தர்.
   செந்நாயுருவி வேர் புதன்கிழமை புதன் ஓரையில் காப்புகட்டி எடுத்து மஞ்சள் தடவி வீட்டின் ஈசான்ய திசையில் கட்டிவிட வாஸ்து குற்றம் நிவர்த்தியாகும்.
  செந்நாயுருவி வேரில் தினம் பல் துலக்கி வர முகவசியம் ஏற்படும், மேலும் பகலில் நட்சத்திரத்தை காணும் அளவிற்க்கு கண் பார்வை மிகும், (சிந்திப்பீர் கண் நோயே வராது வாழலாம்)
  இதன் இலைச்சாறு இரண்டு சொட்டு காதில் விட்டுவர சீழ்வடிதல் காதுஎழுச்சி குணமாகும்.
 இதன் சமூலத்தை எரித்த சாம்பலை நீரில் கரைத்து நீரின் தெளிவை எரிக்க சுத்தமான நாயுருவியுப்பு கிடைக்கும், இந்த உப்பை அனுபானத்திற்கு ஏற்ப 4448 நோய்களையும் தீர்க்கும் மாமருந்து என சித்தர் களஞ்சியம் கூறுகிறது.
    பெண்களுக்கு சிவம் கீழேயும் சக்தி மேலேயும், ஆண்களுக்கு சிவம் மேலேயும் சக்தி கீழேயும், ஆணுக்குள் நாற்பது சதம் பெண்ணும், ஆண் முழு ஆணல்ல, பெண்ணுக்குள் நாற்பது சதம்ஆணும், பெண் முழுப் பெண்ணல்ல, பெண்களுக்கும் கற்பமருந்துகள் பொருந்தும்.
   குறிப்பு: சித்த மருத்துவம் இந்து மகாசமுத்திரம், தேகசுத்தியில் இருள்தேகத்தை மருள்தேகமாக்கி மருள்தேகத்தை அருள்தேகமாக்கிட மூலிகை கற்பமருந்துகள் தேவை, பின் நம் சிறுநீரே அமுரிகற்பம்.

No comments:

Post a Comment

drbala avalurpet