Tuesday, 6 August 2019

,Dr bala siddha

அகத்தியர் வாத சஞ்சீவி தைலம்

அகத்தியர் வைத்திய இரத்தினச் சுருக்கம் 360
சுவடி முறை

பாடல் எண்:
246- 248

செய்பாகம் வேப்பெண்ணெய் விளக்கெண்ணெய் புன்னை எண்ணெய் நல்லெண்ணெய்  புங்கெண்ணை வகைக்கு அரை படி கடைச்சரக்குகள் பூண்டு திரிகடுகு வசம்பு பெருங்காயம் ஓமம் கிராம்பு சதகுப்பை கடுகுரோகிணி சித்திரமூல வேர்ப்பட்டை வகைக்கு 17.5 கிராம் வீதம் எடுத்துக் கொள்ளவும். மேற்கண்ட ஐந்து எண்ணைகளை ஒன்றாக கலந்து ஒரு தைல பாத்திரத்தில் ஊற்றி அதில் மேற்கண்ட கடை சரக்குகளை  பொடித்து கல்வத்திலிட்டு அன்ன காடிவிட்டு (கருங்குருவை அரிசி காடி சிறப்பு)  விட்டு  அரைத்த வெண்ணெய் பதத்தில்  எடுத்து ஐந்து எண்ணெய்யுடன் கலந்து அத்துடன் இரண்டரை லிட்டர் அன்னகாடி ஊற்றி ஒன்றாக கலந்து அடுப்பிலேற்றி சிறு தீயாக எரித்து தைல பதத்தில் இறக்கி ஆறவிட்டு வடிகட்டிக்கொள்ளவும் .

மேற்கண்ட தைலத்தை 5 முதல் 10 சொட்டு வீதம்  வெந்நீர் (அ)பாலில் கலந்து சாப்பிட  கை கால் முட்டு இடுப்பு குதிகால் கழத்து தண்டுவலி வலி திமிர் வாதம் நடுக்குவாதம் பக்கவாதம் சரவாங்கி என   வாத நோய் -80ம் தீரும்.  இதே எண்ணெய்யை மேற்பூச்சாக பூசிவர துரிதமாக  குணமடையும்.
வாத நோய்களுக்கு அனுபவத்தில் கைகண்ட சஞ்சீவி தைலம்.

No comments:

Post a Comment

drbala avalurpet