Saturday, 2 March 2019

அலர்ஜி, ஆஸ்துமா, இருமல், ஈஸினோபிலியா, சைனஸ், மண்டைவலி, காய்ச்சல், குணமடைய

♦மருந்துo1

கசாயப் பொடி

தேவையான பொருள்கள்

சுக்கு,

மிளகு,

திப்பிலி,

தாளிச்ச பத்திரி,

சித்தரத்தை,

பேரரத்தை,

அதிமதுரம்

செய்முறை:

முதலியவற்றை சரிவிகித எடையில் கலந்து பொடியாக தயாரித்து பொடியாக வைத்துக்கொள்ளவும்.

இந்தப்பொடியில் ஒரு கிராம் (கால் தேக்கரண்டி) அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிடலாம்.

தண்ணீரில் கலந்தும் சாப்பிடலாம். அல்லது கொதிக்கும் தண்ணீரில் போட்டு வெல்லம் சேர்த்து வடிகட்டி காபி குடிப்பது போல குடிக்கலாம்.

மூக்கு ஒழுகும் உள்ள நேரத்திலும் சளி, இருமல், காய்ச்சல் சமயத்திலும் தினசரி ஐந்து தடவை காபி மாதிரி சாப்பிட வேண்டும்.

சாப்பிட சுவையாக இருக்கும்படி தயாரித்து குடிக்கவும்.

காரம் அதிகமாக இருந்தால் தண்ணீர் கலந்து சுவையாகத்தான் சாப்பிட வேண்டும். காரமாக சாப்பிடக்கூடாது.

♦மருந்துo2

தூதுவளை மிளகு ரசம்

தேவையான பொருள்கள்

தூதுவளல– 100 கிராம்

தக்காளி – 4

மிளகு – 20 கிராம்

இஞ்சி – 10 கிராம்

பூண்டு – 10 கிராம்

கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி

கொத்தமல்லி – ஒரு கொத்து

உப்பு, மஞ்சள் – தேவையான அளவு

நல்ல எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு லிட்டர் தண்ணீரில் தூதுவளை இலையை இட்டு நன்கு கொதிக்க வைத்து பாதியாகச் சுண்ட வைத்து வடிகட்டிக் கொள்ளவும். இதில் 4 தக்காளியை அரிந்து போட்டு நன்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்.

இனி மிளகு, சீரகம், இஞ்சி, மல்லி, கறிவேப்பிலை, மஞ்சள், உப்பு இவற்றை எண்ணெய் விட்டு நன்கு வதக்கவும். பின்னர் தூதுவளை, தக்காளிக் கரைசலைச் சேர்த்து சூடு செய்யவும். நுரை வரும் பதத்தில் இறக்கிவிடவும்.

ஆஸ்துமா, காசநோய், சளி, இருமல், சைனஸ், பிற நுரையீரல் வியாதிகளில் அவஸ்தைப்படுபவர்கள் இந்த ரசத்தை அடிக்கடி சாப்பிட்டு வர..

நோயிலிருந்து முழுமையாகக் குணமடையலாம். இதே முறையில் தூதுவளைக்கு பதிலாக கண்டங்கத்திரி வைத்தும் இந்த ரசத்தைச் செய்யலாம்.

♦மருந்துo3

கற்பூரவல்லிச்சாறு – 100 மில்லி

கண்டங்கத்தரிச்சாறு – 100 மில்லி

ஆடாதொடைச் சாறு – 100 மில்லி

சுக்கு – 50 கிராம்

மிளகு – 50 கிராம்

திப்பிலி – 50 கிராம்

சீரகம் – 50 கிராம்

அதிமதுரம் – 50 கிராம்

சித்தரத்தை – 50 கிராம்

   
இதில் 4 முதல் 9 வரை உள்ள சரக்குகளை ஒன்றாக்கி, தூள் செய்து கொள்ளவும். பின் இத்துடன் 1 முதல் 3 வரை உள்ள சாறுகளை கலந்து பிசையவும்.

இதனைத் தொடர்ந்து
3 நாட்கள் வெய்யிலில் வைத்து, மீண்டும் ஒருமுறை அரைத்து பத்திரப்படுத்தவும். இதை காலை, இரவு உணவுக்குப்பின் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் தீராத சளித்தொல்லை, இருமல், ஆஸ்துமா தீரும்.

♦மருந்துo4

துளசி மல்லி கஷாயம்

தேவையான பொருள்கள்:

பச்சைத் துளசி – 100 கிராம்

சுக்கு – 20 கிராம்

ஏலக்காய் – 5

தனியா (மல்லி) – 20 கிராம்

பனை வெல்லம் – தேவையான அளவு

°°செய்முறை:

துளசி, சுக்கு, மிளகு, ஏலக்காய், மல்லி ஆகியவற்றை ஒன்றிரண்டாகத் தட்டி தேவையான அளவு தண்ணீர் விட்டுக் கொதிக்க வைக்கவும். பின்னர் வடிகட்டி பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து அதிகாலையில் பருகவும்.

சளி, இருமல், ஆஸ்துமா, தும்மல், மூக்கடைப்பு, சருவ வியாதிகள், நுரையீரல் வியாதிகள் அனைத்தும் தீரும்.

♦மருந்துo5

கறிவேப்பிலை - 100 கிராம்

சுக்கு - 10 கிராம்

மிளகு - 10 கிராம்

திப்பிலி - 10 கிராம்

கருப்பு எள் - 50 கிராம்

உளுந்து - 50 கிராம்

பெருங்காயம் - 20 கிராம்

அனைத்தையும் தனித்தனியாக பொடிசெய்து ஒன்றாக கலந்து கொள்ளவும்.

இந்த பொடியை தினமும் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினமும் சாதத்துடன் கலந்து சாப்பிடலாம் அல்லது இட்லி, தோசைக்கு பருப்பு பொடியாகவும் சாப்பிடலாம். இதனால் ஆஸ்துமா நோயாளிகள் இயல்பாக காணப்படுவார்கள், சளி, இருமல், வாயு கோளாறுகள், வயிறு உப்பசம், சீரான கோளாறுகள், மலச்சிக்கல் போன்ற உபாதைகள் உடனே தீருவது திண்ணம்.

♦மருந்துo6

கருபட்டி காபி

√ தேவையான பொருட்கள்:

கருப்பட்டி-1

மேஜைக்கரண்டி

சுக்கு,

மிளகு,

திப்பிலி,

அதிமதுரம்,

அஸ்வகந்தா,

ஏலக்காய்,

மல்லி

[ கருப்பட்டி தவிர்த்து
மற்ற அனைத்து பொருக்களைவும்
சம அளவு வாங்கி
மிசினில் அரைத்து வைத்துக் கொண்டு
தேவையான  அளவு பயன்படுத்தவும். ]

சேர்த்த தூள் -1/4 தேக்கரண்டி

 1 மேஜைக்கரண்டி
காய்ச்சிய பால் 1/4 கோப்பை, தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம்.

°°செய்முறை:

1 கோப்பை தண்ணீரில் கருப்பட்டி மற்றும் பொடியை சேர்த்து 3 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி தயாராக வைக்கவும்.

தேவைப்பட்டால் காய்ச்சிய பால் சேர்த்துக் சாப்பிட்டு
கொள்ளலாம்.

No comments:

Post a Comment

drbala avalurpet