Saturday, 2 March 2019

சரும சஞ்சீவி சூரணம்: ( எங்க வீட்டு அனுபவமுறை)

சுத்தி செய்த கந்தகம் - 1/4 பங்கு
நிலவேம்பு சமூலம் - 1/2 பங்கு
ஆடுதீண்டா பாலை - 1 பங்கு
ஈஸ்வர மூலி - 1 பங்கு
வெள்ளருகு - 2 பங்கு
சங்கக்குப்பி - 2 பங்கு
கிரந்தி நாயகம் - 2 பங்கு
அவரி சமூலம் - 2 பங்கு
பறங்கிப் பட்டை - 3 பங்கு
கருடன் கிழங்கு வற்றல் - 3 பங்கு
கடுக்காய் தோல் - 3 பங்கு

செய்முறை:

மேற்கண்ட சரக்குகளை மண், குச்சி, தூசு முதலியவற்றை நீக்கி முறைபடி சுத்தம் செய்து சூரணித்து பத்திரப்படுத்துக.


அளவு: வெறுகடி
முறை : அந்தி சந்தி வெந்நீருடன்

தீரும் நோய்கள் : உடல் அரிப்பு, சொறி, நமைச்சல், தடிப்பு முதலான சருமரோகங்களுக்கு மிகச் சிறந்த தீர்வு கிடைக்கும்.

பத்தியம் : நோய் தீரும் வரை உடலுறவு தவிர்க்க வேண்டும்,  உப்பு காரம் குறைக்க வேண்டும்,  புளி, மீன், கருவாடு, கோழி, முட்டை, மாமிசங்கள், மொச்சை, கடுகு, கொத்தவரை, பீன்ஸ் முதலியவற்றை தவிர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment

drbala avalurpet