சிலாசத்து பற்பம் செய்முறை
சிலாசத்து பற்பம் பல செய்முறைகளில் செய்யலாம். இது ஒரு எளிமையான முறை பலராமைய்யா சொன்ன முறை.
தேவையான பொருட்கள் :
1. சுத்தி செய்த சிலாசத்து கட்டி(கல்) - 100 கிராம்
2. கற்சுண்ணாம்பு (தாளித்தது ) - தேவையான அளவு
3. குப்பைமேனி சாறு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் தாளித்த கற்சுண்ணாம்பை குப்பைமேனி சாறு விட்டு நன்றாக அரைக்கவும். இந்த அரைத்த கலவையை சிலாசத்துக்கு கவசம் செய்து 20 - 30 வரட்டியில் புடமிட வேண்டும். மறுநாள் புடமிட்டதை எடுத்து கல்வத்திலிட்டு நன்றாக அரைக்க பற்பம் ஆகும். இதை புட்டியில் பத்திர படுத்தவும்.
அளவு :
நேரம் : காலை மற்றும் மாலை
அளவு : 1/2 கிராம் முதல் 1 கிராம் வரை கொடுக்கலாம்
அனுபானம் : நெய் அல்லது வெண்ணை
நாள் : சுமார் 20 நாட்களுக்கு கொடுக்க நல்ல பலன் கிடைக்கும்
தீரும் நோய்கள் :
நீர்த்தாரையில் எரிச்சல், வெள்ளை வெட்டை, உஷ்ணத்தால் ஏற்படும் ரத்த பித்தம், வாய் புண், குன்மம் முதலியவை குணமாகும்.
இது ஒரு கற்ப மருந்து. உடல் இறுகும்.

No comments:
Post a Comment