Thursday, 28 February 2019

tamil maruthuvan

வாத மடக்கி தைலம் செய்முறை :
1 - வாத மடக்கி இலைச்சாறு - 1-லிட்டர்
2 - நயம் விளக்கெண்ணை - 1-லிட்டர்
3 -சுக்கு - 40 - கிராம்
4 - மிளகு - 40 - கிராம்
5 - திப்பிலி -  40 - கிராம்
6 - வெண் கடுகு - 10-கிராம்
மேற் குறிப்பிட்ட 4-சரக்குகளை  வாத மடக்கி இலைச்சாறு விட்டு அரைத்து எண்ணையுடன் கலந்து பதமாகக் காய்ச்சி வடித்து வைத்துக் கொள்ளவும்.
இதனை இரவு படுக்கும் போது 2-டீஸ்பூன் அளவு எடுத்து பாலில் கலந்து சாப்பிடவும்.காலையில் மலம் ஓரிரு முறை கழியும்.
இதனால் தீரும் நோய்கள் :-
வாத ரோகம்,கீல்வாயு,குதிக்கால் வலி,முடக்கு வாதம், நடுக்கு வாதம்,நரம்புத் தளர்ச்சி,கை கால் குடைச்சல், நரித்தலை வாதம் முழங்கால் முட்டி வீக்கம் போன்ற அனைத்தும் தீரும்.இயற்கை முறையில் பயனுள்ள வைத்தியக் குறிப்புகள்:

1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!

2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.

4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.

5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.

7. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.

9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.

10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.

11. காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.

12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.
9884280621

No comments:

Post a Comment

drbala avalurpet