வெண்பூசணி லேகியம்: (அனுபவ முறை)
தேவையான சரக்குகள்:
1. வெண்பூசணி காயை தோல் மற்றும் விதை நீக்கி இடித்து பிழிந்த சாறு - 4 படி
2. பசும்பால் - 2 படி
3. சீனி - 1 கிலோ
4. கோஷ்டம் -10 கிராம்
5. லவங்கம் -10 கிராம்
6. கஸ்தூரி மஞ்சல் -10 கிராம்
7. இந்துப்பு - 10 கிராம்
8. திரிபலை -10 கிராம்
9. அதிமதுரம் -10 கிராம்
10. ஜாதி பத்திரி - 10 கிராம்
11. கடுகு - 10 கிராம்
12. பசு நெய் - 1/2 படி
செய்முறை:
முதலில் எண் 4 முதல் 11 வரை உள்ள சரக்குகளை நேர்த்தியாக பொடித்து சலித்து வைத்துக் கொள்க.
பிறகு ஒரு லேகியம் கிண்ட ஏதுவான பாத்திரத்தில் வெண்பூசணி காய் சாறு, பால், சீனி முதலிய சரக்குகளை இட்டு அடுப்பேற்றி மிதமான தீயிட்டு எரித்து வரும் சமயத்தில் லேகிய பதம் வந்ததும் தீயை தளர்த்தி பாகுடன் நெய்யை விட்டு கிளரி பிறகு அரைத்து வைத்துள்ள சூரணத்தை விட்டு கலந்து நன்கு கிண்டி அடுப்பிலிருந்து இறக்கி ஆரவைத்து பத்திரப்படுத்துக.
அளவு: 2 முதல் 5 கிராம் வரை
பலன்களும் தீரும் நோய்களும்:
உடலுக்கு குளிர்ச்சியை தந்து சூட்டு மற்றும் வெட்டை நோய்களை சாந்தி செய்யும் அற்புத மருந்து,
குறிப்பாக கற்பப்பை உஷ்ணம்,
மூத்திரதாரையில் வரும் எரிச்சல், கால் எரிச்சல்,
வெய்யில் காலங்களில் வரும் நமைச்சல், ஊரல் ரோகங்கள்,
நா வரட்ச்சி, எலும்புருக்கி, நீர்கடுப்பு, கல்லடைப்பு,
மதுமேகம் அதாவது சர்கரை நோய் வந்தவர்களுக்கு உஷ்ணம் ஏற்பட்டு சத்து வெளியாகி தேகம் மெலிந்து பலவீனம் அடைந்த நோயாலிகளுக்கு ஆகும் அற்புத மருந்து இது.
குறிப்பு :
1. இம் மருந்து அதிக குளிர்ச்சியான மருந்தாகையால் சீதளதேகிகள் சற்று கவணத்துடன் சாப்பிட வேண்டும் ஏனெனில் இது கபத்தை விருத்தி பண்ணும்.
2. இம் மருந்து உஷ்ணத்தால் வந்த ஆண்மை குறைவு, விந்து நீர்த்து போதல், விந்து முந்துதல், கணவில் விந்து ஸ்கலிதமாதல் முதலிய பிரச்சனைகளை கூட சிறப்பாக குணம் செய்கிறது.
நன்றி,

No comments:
Post a Comment