Thursday, 28 February 2019

tamil maruthuvan

இரசமணி செய்யும்முறை
சுத்தி செய்த இரசம் – 150 கி,
துருசு – 150 கி,
நவச்சாரம் – 75 கி.
முதலில் துருசையும் நவச்சாரத்தையும் நன்றாக பொடி செய்து கொண்டு ஒரு இரும்பு சட்டியில் பாதியை கொட்டி நன்றாக பரப்பி விட்டு அதன் மேல் இரசத்தை ஊற்றி மீதி உள்ள துருசு நவச்சார பொடியை அதன் மேல் போட்டு மூடி விட வேண்டும். பிறகு அந்த இரும்பு சட்டி நிறைய சுத்தமான தண்ணிர் ஊற்றி வைத்து விட  வேண்டும்.

மறுநாள் எடுத்து பார்க்கும் பொழுது இரசம் கட்டியதைப் போல் இருக்கும்.இந்த இரசத்தை நன்றாக கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். மறுநாள் மீண்டும் அதே போல்  துருசையும் நவச்சாரத்தையும் நன்றாக பொடி செய்து கொண்டு ஒரு இரும்பு சட்டியில் பாதியை கொட்டி நன்றாக பரப்பி விட்டு அதன் மேல் இரசத்தை ஊற்றி மீதி உள்ள துருசு நவச்சார பொடியை அதன் மேல் போட்டு மூடி விட வேண்டும். பிறகு அந்த இரும்பு சட்டி நிறைய சுத்தமான தண்ணிர் ஊற்றி வைத்து விட  வேண்டும்.
மறுநாள் எடுத்து பார்க்கும் பொழுது இரசம் கட்டியிருக்கும். அதை நன்கு கழுவி எடுத்து ஒரு துணியில் பிழிந்து எடுத்து தண்ணிரில் மூன்று நாள் போட்டு வைக்க இரசம் நன்றாக இறுகி இருக்கும் பிறகு புடம் இட்டு மணியாக மாற்றி அவர் அவர் விருப்பம் போல் சாரணைகள் கொடுத்து உபயோகித்துக் கொள்ளலாம்

No comments:

Post a Comment

drbala avalurpet