Thursday, 28 February 2019

tamil maruthivan

தசாம்ருத சூரணம் :( அனுபவ முறை)

1. ஈஸ்வர மூலி,
2. ஆடுதீண்டா பாலை,
3. சங்கன் குப்பி,
4. குப்பை மேனி,
5. தும்பை,
6. வெள்ளருகு,
7. கிரந்தி நாயகம்,
8. நிலவேம்பு
9. வேப்பம்பூ
10. கருடன் கிழங்கு

மேற்கண்ட மூலிகைகளை சேகரித்து நிழலில் உலர்த்தி பக்குவமாக சூரணித்து பத்திரப்படுத்துக.

உபயோகம் : காலை மாலை என இரு வேலையும் 1 கிராம் வீதம் வெந்நீருடன் அருந்த எல்லா வகை விஷ கடி மற்றும் தோல் நோய்களுக்கும், ஆராத ரணம், பால் வினைத் தொற்றுகள், முட்டி வலி, வீக்கம், மேகம் என பல நோய்களுக்கு ஆகும்.

பத்தியம் : மது, புளி, புலால், புனர்ச்சி, புகை, அதிக காரம், ஊறுகாய், கத்தரிக்காய் , மொச்சை முதலியன நீக்கவும்.

குறிப்பு :

1. இம்முறை ஒரு எளிதான மற்றும் அபூர்வ முறையாகும், இதை வழி வழியாக என் முன்னோர் பல காலமாக பயன்படுத்தி பலன் கண்ட முறையாகும்.

2. இம்மருந்துடன் சண்டமாருதத்தை சேர்த்து சமயோசிதம் போல பிரயோகிக்க இன்னும் அனேக நோய்கள் அற்புதமாக செய்தமாகும் இது

No comments:

Post a Comment

drbala avalurpet