Monday, 9 September 2019

drbala avalurpet

கர்ப்ப தரிக்க சில குறிப்புகள்

கல்யாண முருங்கைப் பூவுடன் மிளகு சேர்த்தரைத்து புளியங்கொட்டை அளவு இருவேளை 5 நாட்கள் சாப்பிடவும். 5 நாள் இடைவெளி விட்டு மீண்டும் 5 நாள் சாப்பிட கருப்பை கோளாறுகள் நீங்கி கரு நிற்கும்.

அசோகுப்பட்டை, மாதுளை வேர்ப்பட்டை, மாதுளம் பழ ஓடு சமன் எடுத்து பொடி செய்து 3 சிட்டிகை காலை மாலை வெந்நீரில் 3-4 மாதம் கொடுத்து வர மலடு தீரும்.

இலந்தையிலை 1 பிடி, மிளகு 6, புண்டுபல் 4 அரைத்து விலக்கான 3 நாள் கொடுத்து வர கருப்பை குறைகள் நீங்கி குழந்தை உண்டாகும்.

மாதுளை வேர்ப்பட்டை, மரப்பட்டை, விதை சமன் சூரணம் செய்து 3 கிராம் காலை மாலை வெந்நீரில் கொடுக்க கர்ப்பம் தரிக்கும்.

சித்தாமணக்கெண்ணையில் மஞ்சனத்தி இலைசாறு கலந்து கொடுக்க கரு நிற்கும்.

அரை விராகன் எடை வால்மிளகு, 1 விராகன் எடை ( 3.5g)கற்கண்டு சேர்த்தரைத்து 7நாள் கொடுக்கலாம்.

பொன்னாவரை விதையை பசும்பாலில் போட்டு காய்ச்சி 8 நாள் குடிக்க கர்ப்பம் தரிக்கும்
மிளகு, புண்டு,வசம்பு , வேப்பங்கொழுந்து நான்கையும் அரைத்து விலக்கான மூன்று நாளும் மூன்று மாதங்களுக்கு கொடுக்க குழந்தை பேறு கிட்டும்.

No comments:

Post a Comment

drbala avalurpet