Monday, 9 September 2019

drbala avalurpet

BP, மிதமிஞ்சிய குருதி கொழுப்பு, மூளை இரத்த குழாய் அடைப்பு, மூளை இரத்தக் கட்டு / கட்டி, மூளை இரத்த கசிவு,  பக்கவாதம், அடிபட்டு உடலில் ஏற்பட்டுள்ள வீக்கங்கள் / இரத்த கட்டு/காயங்கள் குணமாக,

அரத்தை குடிநீர் (கஷாயம்):( எனது குருநாதரின் வீட்டு முறை)

தேவையான சரக்குகள்:

01. சித்தரத்தை
02. சிறு தேக்கு
03. வசம்பு
04. ஓமம்
05. சீரகம்
06. விளாலரிசி
07. சுக்கு
08. அதிவிடையம்
09. கச்சோலம்
10. திரிபலா
11. சவுகாரம்
12 . திப்பிலி
13. செஞ்சந்தனம்
14. தக்கோலம்
15. கருங்குறிஞ்சி வேர்
16. காட்டு மிளகு வேர்
17. சிறு குமிழ் வேர்
18. கோரை கிழங்கு
19. சொறியணங்கு வேர்
20. குறுந்தொட்டி வேர்
21. புத்திரி சுண்டை வேர்
22. சிறுசுண்டை வேர்
23. கறுத்த சுண்டை வேர்
24. காட்டு கொன்றைப்பட்டை
25. சாரணை வேர்
26. பெருங்குரும்பைவேர்
27. பாடத்தாளி கிழங்கு
28. அதிமதுரம்
29. குடகப்பாலை அரிசி
30. வெள்ளா மணக்கு வேர்
31. சீந்தில் கொடி
32. கொட்டிக்கிழங்கு
33. பறங்கிப்பட்டை
34. தச மூலம்

செய்முறை:

மேற்கண்ட சரக்குகளை பாகப்படி சம அளவாய் சேகரித்து அரைத்து  காற்று புகாத புட்டியில் பத்திரப்படுத்துக.

பயன்படுத்தும் முறை:

5 கிராம் பொடித்த சூரணத்தை 1/2 லிட்டர் தண்ணீரில் கலந்து கெதிக்க வைத்து 1/4 லிட்டரானதும் வடிகட்டி இளம் சூட்டில் காலை மற்றும் மாலை என இரு வேலையும் உணவுக்கு பின் பருக வேண்டும்.

குறிப்பு:

இம் மருந்து கண்ணியாகுமரி பகுதியில் கையாலக் கூடிய ஒரு இரகசிய முறை. எனவே இதற்கான சரக்குகள் நாகர்கோவில் அருகில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் வாங்கி பயன்படுத்துவது உசிதம்.

இது 100% வேலை செய்யும் மருந்து, நிறைய சரக்குகள் இருப்பதால் பார்ப்பதற்கு கடினமாக தோன்றினாலும் வைத்தியர்களிடம் இருக்க வேண்டிய தரமான மருந்து.

இத்துடன் உரிய பாஷாண, பற்ப, செந்தூரமுறைகளையும் சேர்த்து பிரயோகிக்க இன்னும் வேகமாக வேலை செய்யும் என்பது அனுபவம்

No comments:

Post a Comment

drbala avalurpet