Wednesday, 7 August 2019

drbala siddha

சன்னி வாத தைலம்: (அனுபவ முறை)

தேவையான சரக்குகள்:

01. கோழி முட்டையை வேக வைத்து எடுத்த மஞ்சட் கரு - 30
02. செந்நாயுருவி வேர் அரைத்த விழுது - எலுமிச்சங்காய் அளவு
03. வட்டத்துத்தி வேர் அரைத்த விழுது - எலுமிச்சங்காய் அளவு
04. வேலிப்பருத்தி வேர் அரைத்த விழுது - எலுமிச்சங்காய் அளவு
05. வேப்பெண்ணெய் - ஆலாக்கு 1 (170 மில்லி)

செய்முறை:

மேற்கண்ட முதல் நான்கு சரக்குகளை சேர்த்து நன்றாக பிசைந்து வேப்பெண்ணெயுடன் கலந்து அடுப்பேற்றி கிண்டி வர சரக்குகள் கருகி தைலம் பிரியும். அதை வடித்து வைத்து பத்திரப்படுத்தவும்.

உபயோகம் : சன்னி, வலிப்பு, முக வாதம், மூளை இரத்த குழாய் அடைப்பு  முதலான நோய்களுக்கு மூக்கில் இரண்டு துளிகள் வீதம் விட்டு வர குணமாகும். வாத வலிகளுக்கு மேல் பூச உடனேயே வலி தீரும். இது ஒரு அவசர வலி நிவாரணி மருந்து 

No comments:

Post a Comment

drbala avalurpet