Wednesday, 7 August 2019

drbala siddha

காதில் சீழ் வடிதலுக்கும் காது சவ்வில் ஓட்டை இருப்பதற்கும் தைலம்:

தேவையான சரக்குகள்:

01. சிறு தும்பை இலை சாறு - 1 லிட்டர்
02. கஸ்தூரி மஞ்சல் - 50 கிராம்
03. கருஞ்சீரகம் - 50 கிராம்
04. தேங்காய் எண்ணெய் - 1 லிட்டர்

செய்முறை:

மேற்கண்ட சரக்குகளில் கஸ்தூரி மஞ்சலையும் கருஞ்சீரகத்தையும் நன்றாக பொடித்து சிறுதும்பை சாறுடன் கலந்து எண்ணையும் கூட்டி தைல பாண்டத்தில் விட்டு மனல் பதமாக காய்ச்சி வடிகட்டி பத்திரப் படுத்தவும்.

பயன்படுத்தும் முறை:

அதிகாலையில் காது துவாரங்களில் ததும்ப எண்ணெய் வார்த்து பஞ்சு இட்டுக் கொள்ள வேண்டும்.

அதே போல தலைக்கும் ததும்ப எண்ணெய் வார்த்து தேய்த்துக்கொள்ள வேண்டும்.

அரை மணி நேரம் ஊரிய பிறகு வெந்நீரில் குளித்து விட வேண்டும்.

தீரும் நோய்கள் :

காதில் சீழ் பிடிப்பது, கர்ண நாதம் என்னும் காது இறைச்சல், காது மந்தம், காது சவ்வில் வந்த ஓட்டை, தலையில் ஏற்பட்டுள்ள உள் அடிகள், வர்ம பிரச்சனைகள், சளி பிரச்சனைகள், தொண்டை மற்றும் மூக்கு பிரச்சனைகள் குணமாகி விடும்.

குறிப்பு:

01. காது சவ்வில் ஓட்டை இருந்தால்  எண்ணெயை தழும்ப காதில் ஊற்றினால் ஒரு வித வலி குடுக்கும் எனவே Ear Buds ல் தைலத்தை நனைத்து காதின் உட்புரத்தில் தடவி வரலாம.

02. நோய் தீரும் வரை தினம் தைலத்தை தலைக்கு தேய்த்து வெந்நீரில் குளிப்பதால் தீங்கு ஒன்றும் வராது. ஒரு வேலை தினம் தலைக்கு முழுகுவதில் கஷ்டம் இருப்பின் வாரம் இரண்டு முதல் மூன்று நாட்களாவது தலை முழுகலாம்.

No comments:

Post a Comment

drbala avalurpet