Wednesday, 7 August 2019

drbala siddha

நவகண்டி பாவனசூரணம்.
1 சுக்கு        100 கி
2 மிலகு      100 கி
3 திப்பிலி       100 கி
4 ஓமம்               100 கி
5 சீரகம்               100 கி
6 கருஞ்சீரகம்    100 கி
7 இந்துப்பு          100 கி
8 பெருஞ்சீரகம் 100 கி
9 பெருங்காயம்  100 கி

 இந்த நவசரக்கில்(9) இந்துப்பு பெருங்காயம் தவிர்த்து மற்ற (7)சப்தசரக்கும் கழுவி காயவைத்து சூரணம் செய்து கொண்டு.
மீதிசரக்குஇத்துடன் பவுடர் பதத்தில் சூரணத்துடன் கலந்தபின்.
இஞ்சி சாறு   700 மில்லி
எடுத்து சூரணத்தில் கலந்து பாவணம் செய்து காய்ந்ததும்.

எலுமிச்சம் சாறு 700 மில்லி எடுத்து பாவனை செய்த சரக்கில் ஊற்றி கலந்து பாவனை செய்து.

பிரண்டை சாறு 600 மில்லி எடுத்து பாவனை செய்த சரக்கில் ஊற்றி கலந்து பாவனை செய்து கொள்ளவும்.
பாவணம் செய்த சரக்கு சூரணமாய் இருக்க வேண்டும்.
பித்தம் ஏப்பம் அஜிரணம், வாந்தி தலைசுற்றல் புளியாப்பம் லோ பிபி, ஹை பிபி,பசியைத் தூண்டும் செரிமானம் ஆகும்.

இது வாதபித்தகபத்திற்கு     கைகண்ட மருந்து.
இத்துடன் நான் முன்பு கூறிய அயச்செந்தூரம் கலந்து கொடுக்க இழந்த ஆண்மையைய் மீட்கும். யானை பலம்கிடைக்கும் கற்பம் போல் வேலை செய்யும்.


No comments:

Post a Comment

drbala avalurpet