1.#சிலாசத்து_பற்பம் :- இளநீரில் போட்டு கொதிக்கவைத்து கழுவி சுத்தஞ்செய்த கற்பூர சிலாசத்து ஓர் பலம் எடுத்து அதற்கு கற்சுண்ணத்தைக் கவசஞ்செய்து ஓர் அகலிலடக்கி மேலகல் மூடிச்சீலைமண் செய்து 50 வறட்டியில் புடமிட சிலாசத்து வெளுத்து இருக்கும். இதைப் பொடித்துக் கல்வத்திலிட்டு கற்றாழைச் சாறுவிட்டு ஒரு சாமம் அரைத்து வில்லை செய்துலர்த்தி அகலிலடக்கிச் சீலைமண் செய்து மீண்டும் முன்போல் ஒரு புடமிட நல்ல பற்பமாகும். அரைத்து வைத்துக்கொளக.
இதில் வேளைக்கு 2, 3 குன்றிஎடை வீதம் தினம் இருவேளையாக நெய், வெண்ணெய், பால், இளநீர் முதலிய அனுபானங்களில் அருந்திவர வெள்ளை, வெட்டைச்சூடு, பிரமேகம் முதலியன குணமாகும். இச் சிலாசத்து பற்பத்துடன் சமன் சீந்தில் சர்க்கரை, பொரித்த வெங்காரம் இவைகளைச் சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டு வேளைக்கு 5 முதல் 10 குன்றிஎடை வீதம் தினம் இருவேளையாக வெண்ணெயில் அருந்திவர முற்கூறிய நோய்களில் மிக்க நல்லபலனைத் தரும்.
<><><><><><><><><><><><><><><><><><><>
2. #சிலாசத்து_பற்பம்:-- சுத்திசெய்த கற்பூர சிலாசத்து 300 கிராம் எடுத்து, சிறுசெருபடைச் சாறு தேவையான அளவு எடுத்து சிலாசத்தை கல்வத்திலிட்டு செருபடைச் சாற்றால் அரைத்து, வில்லைகள் தட்டி உலர்ந்தப்பின் 50 வரட்டியில் புடமிடவும். இவ்வாறு மூன்று புடங்களிட பற்பமாகும்.
#அளவும்_அனுபானமும்: 1/2--1 கிராம் வீதம் வெண்ணெய் அல்லது நெய்யுடன் தினமும் இரு வேளைகள் கொடுக்கவும்.
#தீரும்_நோய்கள்:-- மூத்திர எரிவு, வெள்ளைப் படுதல், நீர்க் கட்டு, நீர் கடுப்பு, பித்த வியாதிகள், உடலெரிச்சல்.

No comments:
Post a Comment