#எள்ளு_லேகியம்
200 கிராம் கேழ்வரகு மாவைத் தண்ணீர் விட்டுப் பிசைந்து வேகவைத்து (புட்டவியல்) குழாப்புட்டு குழலிலும் வேகவைக்கலாம்; அப்படி வேகவைத்த மாவின் மொத்த எடைக்கு சமயெடை கழுவி உலர்த்தி எடுத்த எள்ளையும் சேர்த்து உரலில் இட்டு நன்கு இடித்து வைத்துக்கொள்ளவும். இடித்தமாவை தேவைப்பட்டால் மிக்சியில் ஒரு அடி அடித்து வைக்கலாம்.
1 லிட்டர் நாட்டு பசுவின் பாலில் 300 கிராம் கற்கண்டுத் தூளைக் கரைத்து அடுப்பில் ஏற்றி சிறு தீயிட்டுப் பாகுபதத்திற்கு வந்ததும் மேற்படி சூரணத்தை (இடித்த மாவை) தூவிக் கிளரி லேகிய பதத்தில் தேவையான நெய்யை சேர்த்து கிளரி இறக்கி சூடு ஆரியதும் தேனை சேர்த்து பதமாகக் கிண்டி வைக்கவும்.
#அளவு: 1 முதல் 2 நெல்லிக்காய் அளவு.
(காலை--மாலை இரு வேளை சாப்பிடவும்.
#தீரும்_நோய்கள்:- பெண்களுக்கு ஏற்படும் சூதகச் சிக்கலைக் குணப்படுத்துவதுடன் அதி மூத்திரத்தையும் சரிப்படுத்தி, உடலை வன்மையாக்கம்.
சூதகச் சிக்கல்( period problem)
No comments:
Post a Comment