சிறப்பு குளிர்தாமரை தைலம்.
*தேவையான பொருட்கள்*
குளிர் தாமரை சாறு - 2 லிட்டர்
சுத்தமான நல்லெண்ணெய் - 1 லிட்டர்
கிச்சிலி கிழங்கு - 20 கிராம்
சாம்பிராணி - 20 கிராம்
கஸ்துரி மஞ்சள் - 20 கிராம்
வெட்டிவேர் - 20 கிராம்
செந்சந்தனம் - 20 கிராம்
*செய்முறை*
முதலில் கடை சரக்குகளை பொடித்து குளிர்தாமரை சாற்றில் நன்றாக அரைத்து கல்கமாக எடுத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பெரிய இரும்பு கடாயில் குளிர் தாமரை தனிச்சாறு வடிகட்டி விட்டு அதனுடன் நல்லெண்ணெய் சேர்த்து அரைத்த கல்கத்தை வைத்து சிறு தீயாக எரித்து சாறு சுண்டி நுரை அடங்கி மணல் பருவத்தில் இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்தவும்.
*பயன்கள்*
வாரம் ஒரு நாள் தலைக்கு தைலம் தேய்த்து முழுகிவர
வெள்ளை
வெட்டை
கண் எரிச்சல்
உட்சூடு
தூக்கமின்மை .
முடி கொட்டுதல் .
தலைமுடி அடர்த்தியின்மை
மூலச்சுடு.
ஆசன கடுப்பு
அஸ்தி காங்கை
உடல் சூட்டினால் வரும் துரித ஸ்கலிதம்
பைத்தியம் முதலியவை தீரும் .
No comments:
Post a Comment