Wednesday, 14 August 2019

drbala avalurpet

காமரூபி லேகியம்:
வால்மிளகு 30 gm
லவங்க பட்டை 30 gm
குல்கந்து 30 gm
அக்கிராகாரம் இவைகள் 30 gm
ரூமஸ்தகி (பூனைக்கண் குங்கிலியம் ). 15 gm.
கடலை மாவு 15 gm.
ஜாதிக்காய் 15 gm.
போஸ்தக் காய் 15 gm.
குரோசானி ஓமம். 15 gm.
முள்ளிலவம் பிசின் 15 gm.
லவங்கம் 15 gm.
ஜாதி பத்திரி 15 gm.
சுக்கு 15 gm.
குங்குமப்பூ 4 gm.
குல்கந்து,குங்குமப்பூ இவ்விரண்டையும் தவிர மற்ற சரக்குகளை முறைப்படி சுத்தி செய்து உலர்த்தி இடித்து சூரணம் செய்து கல்வத்தில்
போட்டு சுத்தமான தேன் விட்டு அரைத்து மெழுகுபதம் வருகையில் குங்குமப்பூவையும் சேர்த்து அரைத்து பிறகு குல்கந்தையும் சேர்த்து கையினால் பிசைந்து பின் ஓர் பீங்கான் பரணையில் அடக்கம் செய்து வைத்துக்கொண்டு வேளையொன்றுக்கு 7 gm வீதம் சாப்பிடவும்.
இப்படி 20 நாட்கள் காலையும்,மாலையும் சாப்பிட தாது விருத்தியாகி நீர்த்தாரை சிறுத்து அதிக சந்தோஷத்தை கொடுக்கும்.
இதை சாப்பிடும் பொது 150 மில்லி பசும்பால் சாப்பிட்டு வரவும்.பால்,தயிர்,நெய்,வெள்ளாட்டுக்கறி சேர்த்துக்கொள்வது மிகவும் நன்மை.

No comments:

Post a Comment

drbala avalurpet